இலங்கையில் இணைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாத வகையிலான சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
நிலையான அரசியல் தீர்வுக்கான '100 நாட்கள் செயல்முனைவின்' நான்காவது வருட அணிதிரளல் நிகழ்வு இன்று திருகோணமலையில் நடைபெற்றது.
திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், சிவில் சமூகப் பெண் பிரதிநிதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, அப்பகுதி மக்களின் அரசியல் உரிமைகள், சுயநிர்ணய உரிமை, நில உரிமை, மொழி உரிமை மற்றும் சமூகப் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தரமான அரசியல் தீர்வொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு பல்வேறு தீர்வுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படாத நிலை தொடர்வதாக ஒருங்கிணைப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, எதிர்காலத்தில் மாற்ற முடியாத வகையிலும் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட வகையிலும் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி நிலையான அரசியல் தீர்வை உருவாக்க வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு மேலும் தெரிவித்துள்ளது.

Latest News
நீர்விநியோகம் அவசரமாக இடைநிறுத்தப்பட்டது ஏன்? களனி கங்கையில் இரசாயனம் கலந்ததா?
Local
25 August 2026
புறக்கோட்டையில் வெற்றிலை துப்பினால் இனி சுத்தம் செய்யணும்! 1,029 பேருக்கு பாடம் புகட்டிய வான்படை
Local
25 August 2026
வெளிநாட்டு பணியாளர்களுக்கான H-1B விசா கட்டணத்தை உயர்த்த அமெரிக்கா நடவடிக்கை
Local
25 August 2026
துபாயில் இருந்து அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’: பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டம்
Local
25 August 2026
உறவினர் வீட்டில் நடந்த பெரும் சோகம் : 3 வயது சிறுமியின் உயிரைப் பறித்த இரசாயன திரவம்!
Local
25 August 2026
ரூ.3878 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துகளை அரசுடைமையாக்க நடவடிக்கை!
Local
25 August 2026
விஜய்யின் அம்மா ஷோபாவிற்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு
Local
25 August 2026
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இலங்கையில் சட்டென குறைந்த தங்க விலை!
Local
25 August 2026
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது
Local
25 August 2026
கேரளாவில் 100 மீட்டர் தொலைவில் சிறுத்தை – விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் ஆபத்தான பயணம்!
Local
25 August 2026