ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்தி, அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமானாயக்க, இலங்கை சுங்கத் திணைக்களத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய காலப்பகுதியை மையப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஊழலை ஒழிப்பதாகக் கூறும் ஜனாதிபதி, இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அரசாங்கத்தைச் சாடிய அவர், நெல் கொள்முதல் விலை வீழ்ச்சி, அரிசி விலை உயர்வு, வரிச்சுமை, மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டண உயர்வால் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அரச நிறுவனங்கள் சார்ந்த பாதுகாப்பு மற்றும் இணையக் குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், துறைமுகக் கொள்கலன் சம்பவங்களுக்கும் எதிர்க்கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அரசியல் மோதல்களைத் தவிர்த்து, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

Latest News
நேபாள வெள்ளப்பெருக்கு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு
Local
27 August 2026
சமூக வலைதள ரீல்ஸ்களாகும் சட்டசபை நேரலை - எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை குறித்து ஆலோசனை!
Local
27 August 2026
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி : காணொளியை வெளியிட்டு ரசிகர்களை எச்சரித்த நடிகை சமந்தா!
Local
27 August 2026
கடல் வளத்தைப் பாதுகாக்க புதிய முயற்சி – நிலாவெளியில் உருவாகும் பவள அருங்காட்சியகம்!
Local
27 August 2026
காதலைச் சொல்ல இப்படியொரு பிரம்மாண்டமா? - இணையத்தை அதிரவிட்ட யூடியூபர்!
Local
27 August 2026
முதல் முதலீடு : அதுவும் யாழ் அணிக்காக -கிரிக்கெட்டைத் தாண்டி புதிய களத்தில் மதீஷ
Local
27 August 2026
"நிலநடுக்கம் அல்ல.. திபெத் பனிப்பாறை சரிவுதான் காரணம்" - நேபாள பேரழிவு குறித்து வெளிவந்த அதிரடித் தகவல்!
Local
27 August 2026
நேபாளத்தின் பேரிடர் மீட்புக்கு கைகொடுக்கும் இலங்கை - வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவசர தொலைபேசி உரையாடல்!
Local
27 August 2026
கிலியன் எம்பாப்பேவின் ஹெட்ரிக் கோல்: ரியல் சோசியட் அணிக்கு எதிரான போட்டியில் ரியல் மட்ரிட் அபார வெற்றி!
Local
27 August 2026
தாய் இழந்த பன்றிக் குட்டிக்கு பால் கொடுத்த பசு – நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்!
Local
27 August 2026