General23 August 2026

‘Diamond Excellence விருதுகள் 2026 - ஹிரு ஊடகப் வலையமைப்புக்கு பல விருதுகள்!

2026 ஆம் ஆண்டிற்கான Diamond Excellence விருது வழங்கலில் ஹிரு ஊடக வலையமைப்பு (Hiru Media Network) பல முக்கிய பிரிவுகளின் கீழ், விருதுகளை வென்றுள்ளது.

'சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ்' (City of Dreams) விருந்தகத்தில் இன்று (23) நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், ஆண்டின் மிகச்சிறந்த செய்தி நாமத்துக்கான (Most Outstanding News Brand of the Year) விருதை 'HIRU NEWS' தட்டிச்சென்றது.

இந்த விருது வழங்கல் விழாவில் ஹிரு ஊடக வலையமைப்பு மேலும் பல விருதுகளை வென்றது.

ஆண்டின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி: 'Hiru Star'

ஆண்டின் மிகவும் பிரபலமானஅரசியல் நிகழ்ச்சி: 'சலகுண'

ஆண்டின் மிகவும் பிரபலமான காலை நேரத் தகவல் பொழுதுபோக்கு நிகழ்ச்சி: 'பத்தரே விஸ்தர'

ஆண்டின் மிகவும் பிரபலமான பௌத்த ஆன்மீக மற்றும் கலாசார தொடர்பு நிகழ்ச்சி: 'ஹிரு ஸ்ரத்தாபி வந்தனா'

ஆண்டின் மிகவும் பிரபலமான கலாசார பொழுதுபோக்கு இசைத் தயாரிப்பு நிகழ்ச்சி: 'ஜான'

ஆண்டின் மிகவும் பிரபலமான கலந்துரையாடல் நிகழ்ச்சி: 'Copy Chat'

ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நாடகத் தொடர்: 'ரொன் சொயா' (Ron Soya)

ஆண்டின் மிகவும் பிரபலமான வாரயிறுதித் தொலைக்காட்சி நாடகம்: 'ஒப என்ன எவித் யன்ன' (Oba Enna Avith Yanna)

ஆண்டின் மிகவும் பிரபலமான சிறுவர் நிகழ்ச்சி: 'பொடி வெட்டோ' (Podi Waddo)

ஆண்டின் மிகவும் பிரபலமான யூடியூப் தளம்: HIRU TV Youtube Channel

ஆண்டின் மிகவும் பிரபலமான தமிழ் வானொலிச் சேவை: சூரியன் FM

இலங்கையின் ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி வலையமைப்பு: 'ஹிரு டிவி'

ஆண்டின் மிகவும் நம்பகமான தொலைக்காட்சி செய்திச் சேவை: 'ஹிரு நியூஸ்'

இலங்கையின் ஆண்டின் நேயர்களின் விருப்பத்திற்குரிய மிகவும் பிரபலமான வானொலிச் சேவை: 'ஹிரு எஃப்.எம்'

இலங்கையின் முதன்மை கிளாசிக் ஹிட்ஸ் (ஆங்கில) வானொலிச் சேவை: 'கோல்ட் எஃப்.எம்'

ஆண்டின் மிகவும் பிரபலமான இளைஞர்களின் வானொலிச் சேவை: 'ஷா எஃப்.எம்'

ஆண்டின் மிகவும் பிரபலமான முக்கிய நேர (Prime Time) தொலைக்காட்சி நாடகத் தொடர்: ஹிரு டிவியின் 'பாட்ட குருல்லோ'
ஆண்டின் மிகவும் நம்பகமான புலனாய்வு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருதை ஹிரு டிவியின் ‘சிஐஏ’ வென்றது.

ஆண்டின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் ஊடகம், பல்லூடக ஒளிபரப்பு மற்றும் நேயர்களின் ஈடுபாட்டிற்கான விருதை Hirunews.lk, Hirutv.lk, Hirufm.lk மற்றும் Hirugossip.lk வென்றுள்ளன -

ஆண்டின் சிறந்த நேரடி பொழுதுபோக்கு இசை நிகழ்வுக்கான விருதை 'ஹிரு மெகா ப்ளாஸ்ட்' வென்றுள்ளது

ஆண்டின் மிகவும் பிரபலமான காலை நேர வானொலி நிகழ்ச்சிக்கான விருதை ஹிரு எஃப்.எம்மின் 'அரா எண்ட் பெஸ்பரா' வென்றுள்ளது

ஆண்டின் முதன்மை ஆங்கில வானொலி ஒலிபரப்புக்கான விருதை 'சன் எஃப்.எம்' வென்றுள்ளது

ஆண்டின் தொலைக்காட்சி ஒலிபரப்புக்கான 3D மற்றும் டிஜிட்டல் எனிமேஷன் விநோதப் படைப்புக்கான விருதை ஹிரு டிவியின் '3D & டிஜிட்டல் எனிமேஷன்' வென்றுள்ளது

Related recommendation
Hiru TV News | Programmes