துபாயில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு துபாய் காவல்துறையினரால கைது செய்யப்பட்ட அவர், இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை காவல்துறையின் விசேட குழுவினரால் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை, கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபராக பஸ் லலித் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தலும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அரச புலனாய்வுச் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று துபாய் சென்றிருந்தது.
இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள பஸ் லலித்திடம், அவர் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகள் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Latest News
பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள புதிய பேரிடர் முகாமைத்துவ கட்டமைப்பு அவசியம்: சஜித் எச்சரிக்கை!
Local
26 August 2026
சர்வதேச நாய்கள் தினம் இன்று
Local
26 August 2026
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி: follow on பெற்றது இலங்கை அணி
Local
26 August 2026
பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 15 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு
Local
26 August 2026
"கலாசாரம் ஆடையில் இல்லை, உணர்வில் உள்ளது.." - கங்கனாவின் விமர்சனத்துக்கு கிருத்தி சனோன் பதில்
Local
26 August 2026
தரம் குறைந்த உரம் இறக்குமதி ஊழல் வழக்கு: டிசம்பர் 4ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
26 August 2026
கெஹல்பத்தர பத்மேவின் கைப்பேசிகள் மூலம் வெளிவந்த முக்கியத் தகவல்கள்: குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை
Local
26 August 2026
காதலின் வெளிப்பாடா அல்லது சட்ட மீறலா? சிற்றூந்தில் 3,400 முத்தக் குறியீடுகளைப் பதித்த இளம் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!
Local
26 August 2026
டொக்சிக் படக்குழுவின் அதிரடி வேண்டுகோள்: இரசிகர்கள் செய்யக்கூடாதவை என்ன?
Local
26 August 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெளியேறும் மற்றும் நுழைவுப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
Local
26 August 2026