முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், சீனாவிடமிருந்து தரம் குறைந்த 20,000 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருவதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சில நபர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வேறு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அளுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கொழும்பு பிரதான நீதிவான் அசாங்க எஸ். போதரகம முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால், விசாரணையை நிறைவு செய்து தொடர்புடைய அறிக்கைகளைச் சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசத்தை, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் கோரினர்.
சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிவான், வழக்கை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
Latest News
முதலமைச்சர் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகரின் பிறந்தநாள் : வெளிநாட்டிலிருந்து திடீரென வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மருமகள்
Local
26 August 2026
நம்பவே முடியவில்லை – கயாடு லோஹருக்கு வானூர்தியில் கிடைத்த அரிய வாய்ப்பு
Local
26 August 2026
தொடர்பு கொண்டு அழைத்தாலும் எந்தவித பதிலும் இல்லை: 'பென்ஸ்' படக்குழுவினர் மீது நடிகர் நிவின் பாலி அதிருப்தி
Local
26 August 2026
சிறந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் - கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் புகழாரம்
Local
26 August 2026
இணையத்தை கலக்கும் சாய் அபயங்கரின் 'ரதிமா' - 30 இலட்சம் பார்வைகளைக் கடந்து வரவேற்பு!
Local
26 August 2026
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம் : குழந்தை பராமரிப்புக்காக ரூ.53 இலட்சம் வரை நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிப்பு!
Local
26 August 2026
பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள புதிய பேரிடர் முகாமைத்துவ கட்டமைப்பு அவசியம்: சஜித் எச்சரிக்கை!
Local
26 August 2026
சர்வதேச நாய்கள் தினம் இன்று
Local
26 August 2026
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி: follow on பெற்றது இலங்கை அணி
Local
26 August 2026
பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 15 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு
Local
26 August 2026