டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்திற்குப் பின்னர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பாடசாலைகளுக்கு சென்று, அங்குள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து வருகிறார்.
பாடசாலைகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததை அவர் கண்டறியும் இடங்களில், அது தொடர்பான விவரங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அபிஜித் தீப்கேவிடம், இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்ட முதலமைச்சர் யார்? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்களில் ஒருவராக இருந்துள்ளார். அவர் மாநிலத்தின் பொருளாதாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் சிறந்த முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளார்.
டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பாடசாலைக் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.
நேர்மையாகக் கூற வேண்டுமானால், இன்னும் பல முதலமைச்சர்கள் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
பல்வேறு மாநில முதலமைச்சர்களின் ஆட்சிச் செயல்பாடுகள் குறித்து அபிஜித் தீப்கே தெரிவித்துள்ள இந்தக் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
Latest News
தியாகி பொன் சிவகுமாரனின் 76 ஆவது பிறந்தநாள் நினைவு தினம் அனுசரிப்பு!
Local
26 August 2026
சிறைச்சாலை விடுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட கைதி உந்துருளியுடன் தப்பியோட்டம்
Local
26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 384 பயணிகள் மாயம்!
Local
26 August 2026
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: இலங்கை அணி தொடர்ந்தும் தடுமாற்றம்
Local
26 August 2026
செப்டம்பர் 14 முதல் யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் வலயங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்படும்
Local
26 August 2026
கடந்த 24 மணி நேரத்தில் சோகம்: வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு!
Local
26 August 2026
3 பிள்ளைகளுக்கு அப்பாவான பின் திடீர் திருமணம் : தடகள உலகை அதிரவிட்ட உசைன் போல்ட்டின் காதலுக்கு கிடைக்கும் மகுடம்!
Local
26 August 2026
அரசாங்கம் எத்தகைய சமரசத்திற்கும் இடமளிக்காது - ஆனந்த விஜேபால
Local
26 August 2026
சமூக வலைத்தள சர்ச்சைகள் : நடிகை தர்ஷா குப்தா மீது வழக்கு பதிவு
Local
26 August 2026
எல்நினோ காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவில் குடிநீர் தட்டுப்பாடு
Local
26 August 2026