தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகள், நேரடி ஒளிபரப்பின் மூலம் சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாகப் பரவுவதைத் தடுக்கும் வகையில், சட்டப்பேரவை நிகழ்வுகளை சுமார் 15 நிமிடங்கள் தாமதத்துடன் ஒளிபரப்புவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பும் தொகுதி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் முக்கிய விவகாரங்கள் தொடர்பில் பொதுமக்களின் கவனம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் தெரிவிக்கப்படும் சில கருத்துகள் பின்னர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும், அவை நேரடி ஒளிபரப்பில் இடம்பெற்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் முறையிட்டதாகவும், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகளை ஒளிபரப்புவதையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும், நேரடி ஒளிபரப்பின்போது அத்தகைய உள்ளடக்கங்கள் இடம்பெறுவதை முழுமையாகத் தடுப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, சட்டப்பேரவை நிகழ்வுகளை சுமார் 15 நிமிடங்கள் தாமதத்துடன் ஒளிபரப்புவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு தாமதத்துடன் ஒளிபரப்புவதன் மூலம், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர் அவற்றை ஒளிபரப்புக் குழுவினரால் நீக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்த நடவடிக்கை தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Latest News
தாய்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்
Local
07 September 2026
கேப் வெர்டெவின் போகோ தீவில் கோர விபத்து: பெரும்பாலான சிறுவர்கள் உட்பட்ட 25 பேர் பலி
Local
07 September 2026
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
Local
07 September 2026
பொதுப்பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் சிறை செல்வது நிச்சயம்- டில்வின் சில்வா எச்சரிக்கை
Local
07 September 2026
நிதிப் பற்றாக்குறையால் முடங்கிய சமூக சமையலறைகள்: காஸாவில் தீவிரப் பட்டினி!
Local
07 September 2026
ஒரே நாளில் இருவேறு விபத்துக்கள்: ஓடுதளத்தை விட்டு வெளியேறிய வானுார்தி: இடிபாடுகளில் சிக்கி மாணவர்கள் பலி!
Local
07 September 2026
60 குழந்தைகள் உட்பட 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்கு: உறைந்துபோன உறவினர்கள்!
Local
07 September 2026
பிஃபா தலைவர் தேர்தலில் மீண்டும் ஜியானி இன்ஃபான்டினோ போட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Local
07 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் வெடித்த போர்: அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் பலப்பரீட்சை!
Local
07 September 2026
பனிப்பாறை சரிவால் கோரத் தாண்டவம்: 13-வது நாளாகத் தீவிரமடையும் தேடுதல் வேட்டை!
Local
07 September 2026