General27 August 2026

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு போத்தல் குடிநீர் விற்பனை – உணவகத்திற்கு அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது.

இதன்போது, ஒரு லீற்றர் போத்தல் குடிநீருக்கு 120 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி, குறித்த உணவகம் அதனை 200 ரூபாய்க்கு நுகர்வோரிடம் விற்பனை செய்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின் அடிப்படையில், நீதிமன்றம் குறித்த உணவகத்திற்கு 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes