General27 August 2026

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: உயிரிழப்புகள் 359 ஆக அதிகரிப்பு - 1,400 பேர் காணவில்லை

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 359 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1,400 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம், நேபாளத்திலும் அதனை ஒட்டிய திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்திலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களைத் தேடும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அனர்த்தத்தின் முழுமையான பாதிப்பு குறித்து மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes