காஸாவில் அமைதிக்கான வழிகாட்டு வரைபடத்தை (roadmap for peace) இரு தரப்பினரும் பின்பற்றத் தவறினால் அங்கு போர்நிறுத்தம் முற்றிலுமாகச் சிதைந்துவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
காஸா அமைதிக்கான சபையின் உயர் பிரதிநிதி நிக்கோலாய் ம்லாதெனோவ் (Nikolay Mladenov) இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய திட்டத்திற்கு "சிறந்த மாற்று வழி எதுவுமில்லை" என்று குறிப்பிட்ட அவர், "மீண்டும் போர் தொடங்குவது பேரழிவை ஏற்படுத்தும்" என்றும் எச்சரித்துள்ளார்.
காஸாவில் தொடரும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு மத்தியில், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினரையும் எச்சரிக்கும் வகையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
காஸா முனையில் சர்வதேச உறுதிப்படுத்தும் படையை (ISF) நிலைநிறுத்துவதற்கான வழிமுறைகளை அமைதிக்கான சபை நிர்ணயித்துள்ளது.
இதில் மொராக்கோ பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளது, இருப்பினும் துருக்கியின் பங்கேற்பை இஸ்ரேல் எதிர்த்ததால் அந்த நாடு இதில் இடம்பெறவில்லை.
காஸாவின் புனரமைப்பிற்காக 7 பில்லியன் டாலர் நிதியுதவி உறுதியளிக்கப்பட்டுள்ளதாக நிக்கோலாய் ம்லாதெனோவ் தெரிவித்தார்.
இந்தநிலையில் காஸாவில் அன்றாட குடிமை விவகாரங்களை நிர்வகிக்கவும், உள்ளூர் புனரமைப்பை ஒருங்கிணைக்கவும் ஒரு பாலஸ்தீனிய தேசியக் குழு (National Committee for the Administration of Gaza) விரைவில் பொறுப்பேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை நிக்கோலாய் ம்லாதெனோவ் முன்மொழிந்த 15 அம்ச வழிகாட்டு வரைபடத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது
எனினும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்ஹாகு இந்தத் திட்டத்தை வெளிப்படையாக நிராகரித்துள்ளார்.
இதனால் இந்த திட்டத்தின் எதிர்காலம் தற்போதைக்கு நிச்சயமற்ற நிலையிலேயே உள்ள
இதனால் இந்த திட்டத்தின் எதிர்காலம் தற்போதைக்கு நிச்சயமற்ற நிலையிலேயே உள்ள
Latest News
பெற்றோல் விலை குறைப்பு - முச்சக்கர வண்டி கட்டணம் குறையுமா?
Local
31 August 2026
என்னை வைத்து படம் எடுத்தால் படம் 100 கோடி ஹிட்டடிக்கும் - வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பேச்சு!
Local
31 August 2026
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்குப் பிணை
Local
31 August 2026
இலக்கைக் கடந்தது அரசாங்கத்தின் நெல் கொள்வனவு: 46,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகம் கொள்முதல்!
Local
31 August 2026
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது: பிரதான காரணத்தை வெளியிட்ட கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
Local
31 August 2026
கடல் ஆரோக்கியத்தின் முக்கிய குறிகாட்டியான பவளப்பாறைகள் அழிவின் விளிம்பில்: வெளியானது அதிர்ச்சி அறிக்கை!
Local
31 August 2026
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இன்று மீண்டும் குறைந்தது தங்க விலை!
Local
31 August 2026
பிரபல இலங்கை மொடல் சூலாபத்மேந்திர காலமானார்!
Local
31 August 2026
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் அதிகரிப்பு!
Local
31 August 2026
ஜி.வி. பிரகாஷ் படத்தின் விளம்பர நிகழ்ச்சியைத் தவிர்த்தாரா கயாடு லோஹர்? - சமூக வலைதளங்களில் விவாதம்
Local
31 August 2026