2029ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகளும், கட்சியின் பெயரை ‘தேசிய வெற்றிக் கழகம்’ என மாற்றும் திட்டமும் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் விஜய் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், தேசிய அளவில் ராகுல் காந்திக்கு மாற்றாக விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதை டெல்லி காங்கிரஸ் தலைமை கடுமையாக எதிர்ப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், தேசிய அரசியலில் ராகுல் காந்தியின் தலைமைக்கு எதிராக விஜய் களம் இறங்கினால், தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு காங்கிரஸ் கட்சி வழங்கி வரும் ஆதரவை முழுமையாகத் திரும்பப் பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை காங்கிரஸ் தனது ஆதரவைத் திரும்பப் பெற்றால், சட்டப்பேரவையில் விஜய் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதன் காரணமாக, மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைப்பதா அல்லது தேசிய அளவில் பிரதமர் பதவியை நோக்கிய இலக்கை அடைவதா என்ற இக்கட்டான அரசியல் சூழ்நிலைக்கு விஜய் தள்ளப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Latest News
தோனியின் ஹெலிகொப்டர் ஷொட்: செய்து காட்டிய பிரசாந்த் வீர்
Local
31 August 2026
உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: ஐ.நா. கேள்விகளுக்கு அரசு உரிய பதிலளிக்கவில்லை - அஜித் பி. பெரேரா குற்றச்சாட்டு
Local
31 August 2026
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
31 August 2026
விஜய் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி விடுவோம்: காங்கிரஸின் அறிவிப்பு
Local
31 August 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம்
Local
31 August 2026
ஈரானின் லராக் தீவிலுள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்
Local
31 August 2026
பமுனுகம - எப்பாமுல்ல கடற்பகுதியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
Local
31 August 2026
கட்டிடத்தின் ஒரு பகுதி சரிவு: கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மூடப்படுவதாக அறிவிப்பு!
Local
31 August 2026
22வது திருத்தச் சட்டம் கைவிடப்படாது: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டம்!
Local
31 August 2026
சீன அதிகாரிகள் உரிய நேரத்தில் தரவுகளை பகிரவில்லை: குற்றம் சுமத்தும் நேபாளம், மறுக்கும் சீனா
Local
31 August 2026