இலங்கையில் வளிமண்டலத்தின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நாட்டின் காலநிலை மற்றும் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என முன்னாள் சிரேஷ்ட புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி எஸ். அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார்.
‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் தென்மேற்கு பருவக்காற்று நிலவி வருகின்ற போதிலும், அதன் தாக்கம் காரணமாக வடகிழக்கு மற்றும் தென்பகுதிகளில் மட்டுமே மழைப்பொழிவு கிடைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வழக்கமாக வடகிழக்குப் பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு மாறாக, இம்முறை அந்தப் பகுதிகளில் அதிகளவு வெப்பநிலை பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு ஆகியவை புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணிகளாக உள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
புவி வெப்பமடைதலின் பின்னணியில் எல் நினோ (El Niño) போன்ற காலநிலை காரணிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக வழக்கமாக மிதமான வெப்பநிலை நிலவ வேண்டிய காலப்பகுதிகளிலும் 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையான அதிக வெப்பநிலை பதிவாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் நீர்நிலைகள் வற்றுவதுடன், விலங்குகள் மற்றும் விவசாயத் துறையும் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடிக்கடி காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகி, அவை வலுப்பெற்று சூறாவளி மற்றும் கனமழைக்கு வழிவகுக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
வேலை வாங்கித் தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் மோசடி: ரஷ்யாவில் பரிதவிக்கும் இலங்கையர்கள்!
Local
02 September 2026
சுரேஷ் சலேவின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
Local
02 September 2026
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில் தமிழ் மொழியில் தடுமாற்றமா? – அமைச்சரின் பேச்சு காணொளியால் கொதித்தெழும் நெட்டிசன்கள்!
Local
02 September 2026
நேபாள வெள்ளத்தில் பெற்றோர் மாயமான சோகம் : கண்ணீருடன் நீட் தேர்வை எழுதிய மஹாராஷ்டிர மாணவி!
Local
02 September 2026
கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு அறிவிப்பு
Local
02 September 2026
இலங்கை 'ஏ' அணியில் திக்வெல்ல மற்றும் சாமிக்க: இளம் வீரர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்
Local
02 September 2026
கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
Local
02 September 2026
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
Local
02 September 2026
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
Local
02 September 2026
கிழக்கு கொள்கலன் முனையத் திட்ட முறைகேடுகள் - கவனம் செலுத்துமாறு சஜித் கோரிக்கை
Local
02 September 2026