இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் சூறாவளி காரணமாக பலத்த மழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக முன்னாள் சிரேஷ்ட புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி எஸ். அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார்.
‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அறுவடைக்குத் தயாராகும் பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், பெரும்போக விவசாய நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆரம்பிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுபோகப் பயிர்கள் வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்போகப் பயிர்களை வெள்ளப்பாதிப்பிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பருவமழைக் காலம் நிறைவடைந்த பின்னர் எல் நினோ தாக்கம் காரணமாக எதிர்வரும் டிசம்பர் முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் வடகிழக்குப் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து கடும் வறட்சி ஏற்படக்கூடும் எனவும் பேராசிரியர் எச்சரித்துள்ளார்.
இதனால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் காணப்பட்டாலும், அதனை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
நான் பெயரை மாற்றவில்லை - அர்ஜுன மகேந்திரன் கடிதம்
Local
30 August 2026
நுவரெலியா மாவட்டத்துக்கு ரூ. 997 மில்லியன் பெறுமதியான 786 புதிய அபிவிருத்தித் திட்டங்கள்!
Local
30 August 2026
திபெத்தில் அடுத்தடுத்து மண்சரிவு: புதிதாக உருவான தடுப்பு ஏரியால் பரபரப்பு!
Local
30 August 2026
தந்தைக்கு மாதம் ரூ.2 லட்சம் வேதனத்தில் வேலை கொடுத்த சிறுவன்!
Local
30 August 2026
ஒருநாள் உலகக்கிண்ண தொடர் : ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்றாக திலக் வர்மாவை பரிசீலிக்கும் BCCI!
Local
30 August 2026
நேபாள வெள்ளப் பெருக்கில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுமி: பெற்றோருடன் சேர்ந்த நெகிழ்ச்சித் தருணம்!
Local
30 August 2026
துலீப் கிண்ணம் : 15 வயதில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூரியவன்ஷி!
Local
30 August 2026
ஹக்கல தாவரவியல் பூங்காவை அண்மித்து பிரம்மாண்ட புதிய திட்டம்!
Local
30 August 2026
சுவிட்சர்லாந்து இசைநிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு: பெண் பலி, ஐவர் படுகாயம்!
Local
30 August 2026
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் எதிர்ப்பு
Local
30 August 2026