திட்டமிட்ட குற்றக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான ரூ. 6,000 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் தங்கியிருந்த 66 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களையும் உள்ளடக்கி, திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் நிலுவையில் உள்ள 113 விசாரணைகளின் அடிப்படையில் இந்தச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 102 சந்தேகநபர்களுக்குச் சொந்தமான ரூ. 5,423 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 நபர்களுக்குச் சொந்தமான ரூ. 209 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பிரமிட் நிதி மோசடி மற்றும் வெடிபொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேரின் ரூ. 367 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட சொத்துக்களுள் 2 கிலோகிராம் 140 கிராம் தங்கம், 136 ஏக்கர் காணி, 55 வீடுகள் மற்றும் 142 வாகனங்கள் அடங்குகின்றன.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு பிறகு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட 66 சந்தேகநபர்களில், 28 பேர் சர்வதேச சிவப்பு அறிவித்தல்(Red Notice) பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும், 38 பேர் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்படாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு சர்வதேசக் காவல்துறையின் ஊடாக சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக புதிதாக 110 சிவப்பு எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த ஆகஸ்ட் 18 ஆம் திகதிய நிலவரப்படி காவல்துறையினரால் பிறப்பிக்கப்பட்ட மொத்த சிவப்பு எச்சரிக்கைகளின் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது.
பெறப்பட்ட சிவப்பு அறிவித்தல்களில் 96 அறிவித்தல்கள் திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்களு்க்காக பெறப்பட்டவை ஆகும்.
அதில் 35 சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் 18 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திலும், 11 பேர் இந்தியாவிலும் மறைந்து வாழ்கின்றனர். மேலும் பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒரு சந்தேகநபர் வீதம் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
8 முதல் 11 வயதுக் குழந்தைகளுக்கு எடைக் குறைப்பு மருந்துகள் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
Local
05 September 2026
இலங்கைக்கு எதிரான போட்டிகள்: அறிவிக்கப்பட்டது இங்கிலாந்து அணி
Local
05 September 2026
நாமலின் கைதை கண்டித்துள்ள ரணிலின் கட்சி
Local
05 September 2026
அமெரிக்காவில் உலுக்கிய மூன்று குழந்தைகளின் வழக்கு: ரத்துச்செய்யப்பட்ட நீதிமன்ற விசாரணை
Local
05 September 2026
நேபாளம்- திபெத் வெள்ளப்பெருக்கு: சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்
Local
05 September 2026
யுக்ரைன் -ரஷ்ய போர்: அமைதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்: ட்ரம்ப் அறிவித்தார்
Local
05 September 2026
டென்னிஸ் மைதானத்தில் கஞ்சா வாசனை: முறையிட்ட வீராங்கனை
Local
05 September 2026
காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் திட்டம்: வெளிப்படையாக நிராகரித்த அமெரிக்கா
Local
05 September 2026
சர்வதேச மாணவர்களுக்கான பிரபலமான பட்டயப் படிப்பை அவுஸ்திரேலியா ரத்து செய்தது.
Local
05 September 2026
சிசுவுடன் உயிரிழந்த இளம் தாய் : ஐஸ் போதை மோகத்தால் பறிபோன இரு உயிர்கள்!
Local
04 September 2026