2026 ஆகஸ்ட் 31 ஆம் திகதி திங்கட்கிழமை போராட்டங்களை நடத்த அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆகியவை வெளியிட்ட அண்மைய அறிக்கைகளில், குறைந்த வேதனம்; வழங்கும் 130 நாடுகளில் இலங்கை 120-வது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்தே இந்த போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, ஆகஸ்ட் 31 ஆம் திகதி நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் தம்மிக முனசிங்க தெரிவித்துள்ளார்.
அதிகரித்துள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப வேதன உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் முதன்மையான கோரிக்கையாகும்.
இந்த ஆண்டில் ஆறு முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால் அரசு ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தது.
ஆனால், ஆகஸ்ட் மாதம் முடிந்தபோதிலும் எந்தவொரு பத்திரமும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை" எனக் கூறிய முனசிங்க, அந்த அமைச்சரவைப் பத்திரத்தை மறைக்காமல் அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Latest News
தந்தைக்கு மாதம் ரூ.2 லட்சம் வேதனத்தில் வேலை கொடுத்த சிறுவன்!
Local
30 August 2026
ஒருநாள் உலகக்கிண்ண தொடர் : ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்றாக திலக் வர்மாவை பரிசீலிக்கும் BCCI!
Local
30 August 2026
நேபாள வெள்ளப் பெருக்கில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுமி: பெற்றோருடன் சேர்ந்த நெகிழ்ச்சித் தருணம்!
Local
30 August 2026
துலீப் கிண்ணம் : 15 வயதில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூரியவன்ஷி!
Local
30 August 2026
ஹக்கல தாவரவியல் பூங்காவை அண்மித்து பிரம்மாண்ட புதிய திட்டம்!
Local
30 August 2026
சுவிட்சர்லாந்து இசைநிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு: பெண் பலி, ஐவர் படுகாயம்!
Local
30 August 2026
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் எதிர்ப்பு
Local
30 August 2026
நிறைமாத நிலவே.. : நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் நிழற்படங்கள் வைரல்!
Local
30 August 2026
சமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகை அனுபமாவின் பதிவு - மறைமுகமாக யாருக்கு பதிலடி?
Local
30 August 2026
அஜித்தின் 'கிளாடியேட்டர்ஸ்' ட்ரெய்லரில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் உள்ளது : ஜி.வி.பிரகாஷ் உற்சாகம்!
Local
30 August 2026