General31 August 2026

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஆதரித்தும், எதிர்த்தும் 30 மனுக்கள் தாக்கல்

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

இதனையடுத்து, இதுவரை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில், இந்தத் திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து 3 மனுக்களும், எதிர்த்து 27 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தன்மை குறித்து ஆராய்வதற்காக பிரதம நீதியரசரால் சிறப்பு உயர் நீதிமன்ற ஆயம் ஒன்று நியமிக்கப்படவுள்ளது.

அதன்பின்னர், அரசியலமைப்பின் பிரகாரம் இந்த விவகாரத்தை 3 வாரங்களுக்குள் பரிசீலித்து, உயர் நீதிமன்றம் தனது வியாக்கியானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்குச் சமர்ப்பிக்கும்.
Related recommendation
Hiru TV News | Programmes