General31 August 2026

பமுனுகம - எப்பாமுல்ல கடலில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த 13 வயதுச் சிறுவனின் உடலமும் மீட்பு

கம்பஹா, பமுனுகம - எப்பாமுல்ல கடலில் நீராடச் சென்று காணாமல் போன 13 வயதுச் சிறுவனின் உடலமும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எப்பாமுல்ல கடலில் நீராடச் சென்ற 35 வயதுப் பெண்ணொருவர், அவரது 4 வயது மகள் மற்றும் 13 வயதுச் சிறுவன் ஒருவரோடு 12 வயதுச் சிறுமி ஒருவரும் காணாமல் போயிருந்தனர்.

இதற்கிடையில் தாய் (35), அவரது மகள் (4) மற்றும் 12 வயதுச் சிறுமி ஆகியோரின் உடலங்கள் ஏற்கனவே மீட்கப்பட்டிருந்தன.

காணாமல் போன மற்றைய சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த 13 வயதுச் சிறுவனின் உடலமும் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த அனைவரும் ஜா-எலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
Related recommendation
Hiru TV News | Programmes