General02 September 2026

ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ உடலமாக மீட்பு

ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின்படி, குறித்த தொடர்மாடி குடியிருப்புக்குள் அவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மரணம், உயிர்மாய்ப்பாக இருக்கக் கூடும் எனக் காவல்துறை சந்தேகிக்கப்படுவதுடன், அவரது மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்காக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காவல்துறை விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின் பின்னரே மேலதிகத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes