தலவத்துகொடை பகுதியில் உள்ள வானூர்தி பயணச்சீட்டு மற்றும் விசா சேவை வழங்கும் நிறுவனமொன்றில் இடம்பெற்ற 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் குறித்த நிறுவனத்திற்குள் நுழைந்த நால்வர், நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கூர்மையான ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை நிற சிற்றூந்தில் வந்த குறித்த நபர்கள் முகங்களை மூடியிருந்ததாகவும், சம்பவத்தைத் தொடர்ந்து அதே சிற்றூந்தில் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளைச் சம்பவத்தின்போது சந்தேகநபர்கள் ஊழியர் ஒருவரைத் தாக்கிய காட்சிகளும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிறுவனத்தில் இருந்த சுமார் 6 கோடி ரூபாய் பணத்துடன், நிறுவன உரிமையாளர் அணிந்திருந்த நான்கு தங்கச் சங்கிலிகள் மற்றும் மூன்று தங்க மோதிரங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: தனிநபர் பிரேரணை கொண்டுவரும் விஜய்!
Local
03 September 2026
நீர்யானைக்கு பெயர் சூட்ட பொதுமக்களுக்கு வாய்ப்பு!
Local
03 September 2026
கொளத்தூர் தேர்தல் வழக்கு: த.வெ.க எம்.எல்.ஏ வின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று!
Local
03 September 2026
இலங்கை தொடர் நிறைவு: எம்.எஸ்.தோனியுடன் விருந்தில் கலந்துகொண்ட ரிஷப் பண்ட்!!
Local
03 September 2026
மகளிருக்கான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாற்று சாதனைப் படைத்த சமரி அத்தபத்து : 5 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!
Local
03 September 2026
நேபாள வெள்ளப்பெருக்கு: கடன்பாட்டில் பணத்தைப்பெற்று காணாமல் போன மகனைத் தேடி பல மைல்கள் நடைபயணம் மேற்கொள்ளும் தந்தை!
Local
03 September 2026
ஈரானுடனான மோதல் நீண்ட காலம் நீடிக்காது: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை!
Local
03 September 2026
சர்வதேச கால்பந்தாட்ட ஓய்வு: மெஸ்ஸியின் உருவத்தில் 'ஷ்னிட்செல்' தயாரித்து அர்ஜென்டீனா ரசிகர்கள் மரியாதை!
Local
03 September 2026
ரஷ்யாவின் தாக்குதல் முயற்சி: பதிலடி கொடுக்க நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!
Local
03 September 2026
தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முறைப்பாடு!
Local
03 September 2026