எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் வேலையை இழப்போருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் விசேட பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது.
அரசாங்கத்தின் எல் நினோ தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழுவின் நான்காவது கூட்டம், சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தலைமையில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது எல் நினோ தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் சமூகங்கள் மற்றும் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், நாட்டில் காய்கறிப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்கும், காய்கறி மற்றும் பழச் செய்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இதனிடையே, தற்போது எல் நினோ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள 6 மாவட்டங்களில் உள்ள மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், தடையில்லா நீர் விநியோகத்தை முன்னெடுக்கும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டன.
அத்துடன், எதிர்வரும் பெரும்போக செய்கைக்கான ஆயத்தங்கள் குறித்து எதிர்வரும் 4 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவும், பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களின் அதிகாரிகளுடன் ஸூம் வழியிலான கலந்துரையாடலை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த விசேட அமைச்சரவை உபகுழுவின் எதிர்வரும்14 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Latest News
22ஆவது திருத்தச்சட்ட மூல வழக்கு விசாரணை குறித்து பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தி
Local
03 September 2026
எல் நினோ தாக்கத்தால் வேலையிழப்போருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் பரிசீலனை
Local
03 September 2026
கடன் சுமை 190 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கவில்லை - மறுக்கிறார் பிரதி அமைச்சர்!
Local
03 September 2026
அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு!
Local
03 September 2026
உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன? - 3 நிமிடங்களில் சுருக்கமாக!
Local
03 September 2026
பூட்டான் பிரதமருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு
Local
02 September 2026
பூட்டானில் சர்வதேச பிரதிநிதிகளுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!
Local
02 September 2026
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் மகன் கைது
Local
02 September 2026
2027ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மாற்றம்
Local
02 September 2026
PAYE வரிச் சுமையை உடனடியாகக் குறைக்க வேண்டும் - ஜனாதிபதி செயலாளர்!
Local
02 September 2026