அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனையை உயர் நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளது.
இதனையடுத்து, சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான வியாக்கியானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு, அனுப்பி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட ஆயம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சட்டமூலத்திற்கு எதிராகவும், அதற்கு ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களையும், சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், மனுக்கள் தொடர்பில் ஏதேனும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் இருந்தால், அவற்றை நாளை பிற்பகல் 3 மணிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, நாட்டின் நீதித்துறை நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, நீதிமன்ற செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதுடன், நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிக்கும் நோக்கிலேயே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமும், நீதித்துறை அமைப்பு தொடர்பான திருத்தச் சட்டமூலமும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மன்றாடியார் நாயகம் விராஜ் தயரத்ன இந்த விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
குறித்த சட்டமூலங்கள் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற நிலையில், இன்று விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
இநத்நிலையில், உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பவுள்ள இரகசிய வியாக்கியானம்,22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அடுத்தகட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக அமையுவுள்ளது.

Latest News
கொள்ளுப்பிட்டியில் தொடர்மாடி குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்; சந்தேக நபர் கைது!
Local
04 September 2026
அமெரிக்க நியூயோர்க் நகர் பாடசாலைகளில் எட்டாம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவுக்குத் தடை: புதிய தொழில்நுட்பக் கொள்கைகள் அறிவிப்பு
Local
04 September 2026
காஸாவில் ஏழை நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்க கூடார மருத்துவமனை!
Local
04 September 2026
மகளிர் ஆசிய கிண்ணம் : சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
Local
04 September 2026
முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் : நமீபியாவை வீழ்த்தி இறுதிப்போட்டி வாய்ப்பை தக்கவைத்தது ஸிம்பாப்வே!
Local
04 September 2026
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக V.V.S லக்ஷ்மண் நியமனம்
Local
04 September 2026
ராமாயணம்' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டுத் திகதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது படக்குழு!
Local
04 September 2026
அமெரிக்காவிடம் போதிய அளவு ஆயுதம் கையிருப்பு உள்ளது:அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி
Local
04 September 2026
பிரிக்ஸ் உச்சி மாநாடு: செப்டம்பர் 11 ஆம் திகதி டில்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!
Local
04 September 2026
வசூல் சாதனையில் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே': அமெரிக்க பொக்ஸ் ஒப்பிஸ் வரலாற்றில் 3 ஆவது இடம்!
Local
04 September 2026