அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற விசாரணை ஆரம்பமானது.
இந்த மனுக்கள், ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக மொத்தம் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முன்மொழியப்பட்ட சட்டமூலத்தில் உள்ள சில ஏற்பாடுகள், அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் இறையாண்மை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இந்தச் சட்டமூலத்தின் மூலம் தகவல் அறியும் உரிமையும் பாதிக்கப்படக்கூடும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமெனில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டதுடன், மக்கள் வாக்கெடுப்பிலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Latest News
"குற்றம் செய்தவருக்கே அதன் தீவிரம் தெரியும்": நாமல் ராஜபக்ஷ குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கருத்து!
Local
03 September 2026
ஹோர்முஸ் நீரிணைக்கு 'ட்ரம்ப் நீரிணை' என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
Local
03 September 2026
தண்டனையிலிருந்து விலகும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு அரசாங்கத்திற்கு அழுத்தம்
Local
03 September 2026
ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
Local
03 September 2026
அமெரிக்காவின் $1 நாணயத்தில் டொனால்ட் ட்ரம்பின் உருவம்: அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திற்கு வந்தது!
Local
03 September 2026
கொழும்பின் பல பகுதிகளில் இன்று 24 மணி நேர நீர் விநியோகம் தடை
Local
03 September 2026
பொரளை – சஹஸ்புர பகுதியில் காவல்துறை துப்பாக்கிச்சூடு : ஐவர் கைது
Local
03 September 2026
விஜய் வெற்றியால் மாறிய திட்டம் : ஜெயிலர் 2 திரைப்படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க ரஜினி முடிவு!
Local
03 September 2026
22வது அரசியலமைப்புத் திருத்த வழக்கு: இளம் சட்டத்தரணிகளின் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்!
Local
03 September 2026
உலகளாவிய அரசியல் பதற்றம் : அமெரிக்காவிலிருந்த தங்கத்தை திடீரென லண்டனுக்கு மாற்றிய நெதர்லாந்து!
Local
03 September 2026