இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியான தன்மை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிகவும் மெத்தனப் போக்கில் காணப்படுவதாக மனித உரிமைகளை கண்காணிக்கும் (Human Rights Watch) அமைப்பு தனது புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சில முக்கிய வழக்குகள் தொடர்பில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர், சித்திரவதைகள் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பான பல முக்கிய வழக்குகள் தொடர்ந்து ஸ்தம்பித்துள்ளதாக அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பல மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாள காண்பதற்கோ அல்லது பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மனித உரிமைப் போராளிகளும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கும் பயமுறுத்தல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.
இதேவேளை சர்வதேச சமூகத்தின் பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு அரசாங்கம் முறையாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், தசாப்த காலமாக நிலவும் தண்டனையிலிருந்து விலகும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உண்மையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச சமூகத்திடம் மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதியை வழங்க உடனடியாகச் செயற்படுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு அந்த அமைப்பு அழுத்தம் கொடுத்துள்ளது.

Latest News
ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு
Local
04 September 2026
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் குசல் மெண்டிஸ், பினுர பெர்னாண்டோ விலகல்
Local
04 September 2026
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு: இன்று முதல் வழங்கப்படும்!
Local
04 September 2026
பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட சிறுவன் உயிரிழப்பு
Local
04 September 2026
தேயிலை விற்பனையில் மந்தநிலை: அதிரடியாக குறைந்தது தேயிலை விலை
Local
04 September 2026
முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலை: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளிகள்!
Local
04 September 2026
ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் பெர்னாண்டோ மரணம் - உடற்கூற்றுப் பரிசோதனையில் பகிரங்கத் தீர்ப்பு
Local
04 September 2026
தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டது கல்வி அமைச்சு!
Local
04 September 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது
Local
04 September 2026
பிரபல அமெரிக்கப் பெண்ணிய செயற்பாட்டாளர் குளோரியா ஸ்டெய்னம் (92) காலமானார்
Local
04 September 2026