Top Story
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணைகளைக் அவதானித்த பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் (Commonwealth Lawyers' Association) தலைவர் ஸ்டீவன் திரு, வழக்கின் இறுதித் தருணங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் விசாரணை நடைமுறைகள் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

இந்த அவதானிப்புகளின் அடிப்படையில் விசேட அறிக்கையொன்று தயாரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், மனுதாரர் தரப்புச் சட்டத்தரணிகள் தங்களது வாதங்களுக்கு வாய்மொழி மூலம் பதிலளிப்பதற்கான உரிமையை மறுத்து (Right of Reply), எழுத்துப்பூர்வமாக மட்டும் சமர்ப்பிப்புகளை வழங்குமாறு கோரப்பட்டமையானது பெரும்பாலான நீதித்துறை வரம்புகளில் வழக்கமாக இடம்பெறாத ஒன்று எனக் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறானதொரு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் வாய்மொழி மூல பதிலளிப்புக்கான உரிமை கட்டாயம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், நீதித்துறையின் சுதந்திரம் சார்ந்த இந்த முக்கிய வழக்கை விசாரிப்பதற்கு பூரண நீதியரசர்கள் ஆயம் (Full Bench) அல்லது விரிவான நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்படாமையும், உயர்நீதிமன்றத்தின் ஏனைய சிரேஷ்ட நீதியரசர்கள் இந்த ஆயத்தில் இடம்பெறாமையும் சட்டத்தரணிகள் மத்தியில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏனைய நாடுகளில் இவ்வாறான முக்கிய வழக்குகளின் போது மிக சிரேஷ்ட நீதியரசர்கள் இணைந்து அமர்வில் பங்கேற்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமை தாங்குவது தொடர்பில் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அவர் இந்த வழக்கிலிருந்து விலகி வேறு தரப்புக்கு வாய்ப்பளித்திருக்கலாமா என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வழக்கின் சட்டப்பூர்வமான வாதங்களை விட நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே முக்கியமானது என அவர் அழுத்தமாகக் கூறினார்.

நீதித்துறை சுதந்திரத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால், சட்டக் கோட்பாடுகள் பற்றி வாதிடுவதில் பலனில்லை என்றும், குடிமக்களின் கடைசி அரணாக விளங்கும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை சீர்குலைந்தால், அதை மீண்டும் கட்டியெழுப்பப் பல ஆண்டுகள் ஆகும் என்றும் எச்சரித்தார்.

எனவே, இந்த முழுமையான செயன்முறையின் பின்னர் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதா அல்லது சீர்குலைந்துள்ளதா என்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
விபரங்களுக்கு
General03 September 2026
22ஆவது திருத்தச்சட்ட மூல வழக்கு விசாரணை குறித்து பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தி
International News

1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக ‘Rich Dad Poor Dad’ ஆசிரியர் தகவல்! ரொபர்ட் கியோசாகி வெளியிட்ட அதிரடித் தகவல்!

International 03 September 2026
1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக ‘Rich Dad Poor Dad’ ஆசிரியர் தகவல்! ரொபர்ட் கியோசாகி வெளியிட்ட அதிரடித் தகவல்!

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

International 03 September 2026
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

முதலமைச்சர் விஜய் பெயரில் AI டீப்ஃபேக் மோசடி : பின்னணியில் பாகிஸ்தான் ஃபேஸ்புக் கணக்குகள்?

International 03 September 2026
முதலமைச்சர் விஜய் பெயரில் AI டீப்ஃபேக் மோசடி : பின்னணியில் பாகிஸ்தான் ஃபேஸ்புக் கணக்குகள்?

“யாரும் ஓடிவிடக்கூடாது” – தமிழக சட்டமன்றத்தில் வெடித்த வார்த்தை மோதல்!

International 03 September 2026
“யாரும் ஓடிவிடக்கூடாது” – தமிழக சட்டமன்றத்தில் வெடித்த வார்த்தை மோதல்!

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது சென்னை மேல்நீதிமன்றம்!

International 03 September 2026
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது சென்னை மேல்நீதிமன்றம்!

ஹோர்முஸ் நீரிணைக்கு 'ட்ரம்ப் நீரிணை' என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!

International 03 September 2026
ஹோர்முஸ் நீரிணைக்கு 'ட்ரம்ப் நீரிணை' என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!

அமெரிக்காவின் $1 நாணயத்தில் டொனால்ட் ட்ரம்பின் உருவம்: அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திற்கு வந்தது!

International 03 September 2026
அமெரிக்காவின் $1 நாணயத்தில் டொனால்ட் ட்ரம்பின் உருவம்: அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திற்கு வந்தது!

உலகளாவிய அரசியல் பதற்றம் : அமெரிக்காவிலிருந்த தங்கத்தை திடீரென லண்டனுக்கு மாற்றிய நெதர்லாந்து!

International 03 September 2026
உலகளாவிய அரசியல் பதற்றம் : அமெரிக்காவிலிருந்த தங்கத்தை திடீரென லண்டனுக்கு மாற்றிய நெதர்லாந்து!

நேபாள வெள்ளப்பெருக்கு: கடனுக்கு பணத்தைப்பெற்று காணாமல் போன மகனைத் தேடி பல மைல்கள் நடைபயணம் மேற்கொள்ளும் தந்தை!

International 03 September 2026
நேபாள வெள்ளப்பெருக்கு: கடனுக்கு பணத்தைப்பெற்று காணாமல் போன மகனைத் தேடி பல மைல்கள் நடைபயணம் மேற்கொள்ளும் தந்தை!

குற்ற ஒப்புதல் அளித்தார் டைகர் வுட்ஸ்; ஓட்டுநர் உரிமம் 5 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம்!

International 03 September 2026
குற்ற ஒப்புதல் அளித்தார் டைகர் வுட்ஸ்; ஓட்டுநர் உரிமம் 5 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: தனிநபர் பிரேரணை கொண்டுவரும் விஜய்!

International 03 September 2026
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: தனிநபர் பிரேரணை கொண்டுவரும் விஜய்!

கொளத்தூர் தேர்தல் வழக்கு: த.வெ.க எம்.எல்.ஏ வின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று!

International 03 September 2026
கொளத்தூர் தேர்தல் வழக்கு: த.வெ.க எம்.எல்.ஏ வின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று!

நேபாள வெள்ளப்பெருக்கு: கடன்பாட்டில் பணத்தைப்பெற்று காணாமல் போன மகனைத் தேடி பல மைல்கள் நடைபயணம் மேற்கொள்ளும் தந்தை!

International 03 September 2026
நேபாள வெள்ளப்பெருக்கு: கடன்பாட்டில் பணத்தைப்பெற்று காணாமல் போன மகனைத் தேடி பல மைல்கள் நடைபயணம் மேற்கொள்ளும் தந்தை!

ஈரானுடனான மோதல் நீண்ட காலம் நீடிக்காது: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை!

International 03 September 2026
ஈரானுடனான மோதல் நீண்ட காலம் நீடிக்காது: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை!

ரரஷ்யாவின் தாக்குதல் முயற்சி: பதிலடி கொடுக்க நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு எச்சரிக்கை!

International 03 September 2026
ரரஷ்யாவின் தாக்குதல் முயற்சி: பதிலடி கொடுக்க நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு எச்சரிக்கை!
More News
General03 September 2026

கெஹெல்பத்தர பத்மேவின் விளக்கமறியல் நீடிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்த கெஹெல்பத்தர பத்மேவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து Zoom தொழிநுட்பத்தின் ஊடாக சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், விசாரணைகள் தொடர்வதால் விளக்கமறியலை நீடிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை விடுத்தது.இதனை ஏற்றுக் கொண்ட நீதவான், பயங்கரவாதத் தடைச் சட்ட வழக்கு மற்றும் 'கனேமுல்ல சஞ்சீவ' தொடர்பான வழக்கை மாத்திரம் இந்த நீதிமன்றத்தில் தொடருமாறு உத்தரவிட்டார்அத்தோடு, சந்தேகநபர் மீதான ஏனைய வழக்குகளை உரிய நீதிமன்றங்களுக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்.

விபரங்களுக்கு
கெஹெல்பத்தர பத்மேவின் விளக்கமறியல் நீடிப்பு
General03 September 2026

இணையப் பாதுகாப்பில் காத்திருக்கும் பேராபத்து: சமூக ஊடகங்களால் பாதிக்கப்படும் சிறுவர்கள் – 21 நாடுகளின் அதிர்ச்சி அறிக்கை!

உலகின் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள், ஒரே ஆண்டில் இணையவழி பாலியல் சுரண்டல் அல்லது தவறான நடத்தைக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் ஐந்தில் ஒருவருக்கும் அதிகமானோர் இத்தகைய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.அவர்களில் சுமார் 1.5 கோடி சிறுவர்கள் தங்களது விருப்பத்திற்கு மாறாக பாலியல் ரீதியான அல்லது தவறான உள்ளடக்கங்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும், சுமார் 90 இலட்சம் சிறுவர்கள் தவறான உரையாடல்கள் அல்லது படங்களைப் பகிருமாறு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.அத்துடன், சுமார் 40 இலட்சம் சிறுவர்களின் தனிப்பட்ட அல்லது தவறான நிழற்படங்கள் அவர்களின் அனுமதியின்றி பகிரப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.பதிவாகியுள்ள இத்தகைய சம்பவங்களில் சுமார் 60 சதவீதம் சமூக ஊடகத் தளங்கள் மூலம் இடம்பெற்றுள்ளதாகவும் UNICEF அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறுவர்களைப் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்ட தவறான படங்கள் அல்லது காணொளிகளால் சுமார் 11 இலட்சம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் UNICEF தெரிவித்துள்ளது.இத்தகைய சம்பவங்களுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உயிர் மாய்ப்பு அல்லது சுயகாயப்படுத்தல் குறித்த எண்ணங்கள் ஏற்படும் வாய்ப்பு சுமார் நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதேவேளை , சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் தவறான உள்ளடக்கங்கள் உள்ளிட்ட புதிய வகையான இணையவழி துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் சட்டங்களை மேம்படுத்த வேண்டும் எனவும் UNICEF வலியுறுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
இணையப் பாதுகாப்பில் காத்திருக்கும் பேராபத்து: சமூக ஊடகங்களால் பாதிக்கப்படும் சிறுவர்கள் – 21 நாடுகளின் அதிர்ச்சி அறிக்கை!
General03 September 2026

உடற்தகுதி பரிசோதனை இல்லாமலேயே இங்கிலாந்து தொடருக்கு குசல் மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டாரா?

காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகியிருந்த இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணிகளின் தலைவர் குசல் மெண்டிஸ், உடற்தகுதி பரிசோதனையில் பங்கேற்காமலும் போட்டிகளில் விளையாடாமலும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான குழுவில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இங்கிலாந்து சென்ற பின்னர் பயிற்சி போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் தனது உடற்தகுதியை நிரூபிப்பார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பொதுவாக, காயமடைந்த வீரர் ஒருவரை தேசிய அணிக் குழுவில் இணைப்பதற்கு முன்னர், பல கட்ட உடற்தகுதி பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, அவர் போட்டிகளில் விளையாடுவதற்குத் தயாராக உள்ளார் என்பது உறுதி செய்யப்படுவது தேசிய தேர்வுக் குழுவின் நடைமுறையாகும்.ஆனால், குழு தெரிவு செய்யப்பட்டபோதும் குசல் மெண்டிஸ் உடற்தகுதி பரிசோதனைகளில் பங்கேற்கவில்லை என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது இருபதுக்கு 20 போட்டிக்கு முன்னதாக, இலங்கை அணி இங்கிலாந்தில் இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது.அந்தப் பயிற்சி போட்டிகளுக்குப் பின்னர் குசல் மெண்டிஸின் உடற்தகுதி மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

விபரங்களுக்கு
உடற்தகுதி பரிசோதனை இல்லாமலேயே இங்கிலாந்து தொடருக்கு குசல் மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டாரா?
General03 September 2026

"குற்றம் செய்தவருக்கே அதன் தீவிரம் தெரியும்": நாமல் ராஜபக்ஷ குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கருத்து!

குற்றம் செய்தவர் தான் செய்த தவறுகளை நன்கு அறிந்திருப்பதாலேயே, கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி வாழ்கிறார் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அச்சம் நியாயமானதே என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியில் உள்ள அபயராமய புராண விஹாரையில் நடைபெற்ற 'வேஹி பிரித்' வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நாமல் ராஜபக்ஷவுக்கு இருக்குமாயின், அதற்கு முன்னதாகவே ஆதரவாளர்களைத் திரட்டி அவர் கூட்டங்களை நடத்திக் கொள்ளட்டும் என்றும் அமைச்சர் விமர்சித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்தின் அடிப்படையில் பொது வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டால், அதனைச் சந்திக்க அரசாங்கம் முழுமையாகத் தயாராகவே உள்ளது என்றும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், இந்தச் சீர்திருத்தத்திற்குப் பொது வாக்கெடுப்பு அவசியமாகாது என்பதே அரசாங்கத்தின் கணிப்பு என்றும், இது குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ விளக்கம் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நாடாளுமன்றத்திற்குத் தெரியப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விபரங்களுக்கு
General03 September 2026

தண்டனையிலிருந்து விலகும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு அரசாங்கத்திற்கு அழுத்தம்

இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியான தன்மை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிகவும் மெத்தனப் போக்கில் காணப்படுவதாக மனித உரிமைகளை கண்காணிக்கும் (Human Rights Watch) அமைப்பு தனது புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சில முக்கிய வழக்குகள் தொடர்பில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர், சித்திரவதைகள் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பான பல முக்கிய வழக்குகள் தொடர்ந்து ஸ்தம்பித்துள்ளதாக அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பல மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாள காண்பதற்கோ அல்லது பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மனித உரிமைப் போராளிகளும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கும் பயமுறுத்தல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர். இதேவேளை சர்வதேச சமூகத்தின் பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு அரசாங்கம் முறையாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இந்தச் சூழ்நிலையில், தசாப்த காலமாக நிலவும் தண்டனையிலிருந்து விலகும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உண்மையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச சமூகத்திடம் மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.அதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதியை வழங்க உடனடியாகச் செயற்படுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு அந்த அமைப்பு அழுத்தம் கொடுத்துள்ளது.

விபரங்களுக்கு
தண்டனையிலிருந்து விலகும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் -  மனித உரிமைகளை  கண்காணிக்கும் அமைப்பு அரசாங்கத்திற்கு அழுத்தம்
International News

1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக ‘Rich Dad Poor Dad’ ஆசிரியர் தகவல்! ரொபர்ட் கியோசாகி வெளியிட்ட அதிரடித் தகவல்!

International 03 September 2026
1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக ‘Rich Dad Poor Dad’ ஆசிரியர் தகவல்! ரொபர்ட் கியோசாகி வெளியிட்ட அதிரடித் தகவல்!

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

International 03 September 2026
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

முதலமைச்சர் விஜய் பெயரில் AI டீப்ஃபேக் மோசடி : பின்னணியில் பாகிஸ்தான் ஃபேஸ்புக் கணக்குகள்?

International 03 September 2026
முதலமைச்சர் விஜய் பெயரில் AI டீப்ஃபேக் மோசடி : பின்னணியில் பாகிஸ்தான் ஃபேஸ்புக் கணக்குகள்?

“யாரும் ஓடிவிடக்கூடாது” – தமிழக சட்டமன்றத்தில் வெடித்த வார்த்தை மோதல்!

International 03 September 2026
“யாரும் ஓடிவிடக்கூடாது” – தமிழக சட்டமன்றத்தில் வெடித்த வார்த்தை மோதல்!

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது சென்னை மேல்நீதிமன்றம்!

International 03 September 2026
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது சென்னை மேல்நீதிமன்றம்!

ஹோர்முஸ் நீரிணைக்கு 'ட்ரம்ப் நீரிணை' என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!

International 03 September 2026
ஹோர்முஸ் நீரிணைக்கு 'ட்ரம்ப் நீரிணை' என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!

அமெரிக்காவின் $1 நாணயத்தில் டொனால்ட் ட்ரம்பின் உருவம்: அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திற்கு வந்தது!

International 03 September 2026
அமெரிக்காவின் $1 நாணயத்தில் டொனால்ட் ட்ரம்பின் உருவம்: அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திற்கு வந்தது!

உலகளாவிய அரசியல் பதற்றம் : அமெரிக்காவிலிருந்த தங்கத்தை திடீரென லண்டனுக்கு மாற்றிய நெதர்லாந்து!

International 03 September 2026
உலகளாவிய அரசியல் பதற்றம் : அமெரிக்காவிலிருந்த தங்கத்தை திடீரென லண்டனுக்கு மாற்றிய நெதர்லாந்து!

நேபாள வெள்ளப்பெருக்கு: கடனுக்கு பணத்தைப்பெற்று காணாமல் போன மகனைத் தேடி பல மைல்கள் நடைபயணம் மேற்கொள்ளும் தந்தை!

International 03 September 2026
நேபாள வெள்ளப்பெருக்கு: கடனுக்கு பணத்தைப்பெற்று காணாமல் போன மகனைத் தேடி பல மைல்கள் நடைபயணம் மேற்கொள்ளும் தந்தை!

குற்ற ஒப்புதல் அளித்தார் டைகர் வுட்ஸ்; ஓட்டுநர் உரிமம் 5 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம்!

International 03 September 2026
குற்ற ஒப்புதல் அளித்தார் டைகர் வுட்ஸ்; ஓட்டுநர் உரிமம் 5 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: தனிநபர் பிரேரணை கொண்டுவரும் விஜய்!

International 03 September 2026
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: தனிநபர் பிரேரணை கொண்டுவரும் விஜய்!

கொளத்தூர் தேர்தல் வழக்கு: த.வெ.க எம்.எல்.ஏ வின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று!

International 03 September 2026
கொளத்தூர் தேர்தல் வழக்கு: த.வெ.க எம்.எல்.ஏ வின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று!

நேபாள வெள்ளப்பெருக்கு: கடன்பாட்டில் பணத்தைப்பெற்று காணாமல் போன மகனைத் தேடி பல மைல்கள் நடைபயணம் மேற்கொள்ளும் தந்தை!

International 03 September 2026
நேபாள வெள்ளப்பெருக்கு: கடன்பாட்டில் பணத்தைப்பெற்று காணாமல் போன மகனைத் தேடி பல மைல்கள் நடைபயணம் மேற்கொள்ளும் தந்தை!

ஈரானுடனான மோதல் நீண்ட காலம் நீடிக்காது: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை!

International 03 September 2026
ஈரானுடனான மோதல் நீண்ட காலம் நீடிக்காது: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை!

ரரஷ்யாவின் தாக்குதல் முயற்சி: பதிலடி கொடுக்க நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு எச்சரிக்கை!

International 03 September 2026
ரரஷ்யாவின் தாக்குதல் முயற்சி: பதிலடி கொடுக்க நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு எச்சரிக்கை!
Sports Stories
Explore More
ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய ஜடேஜாவின் இன்ஸ்டா வரவு - மீண்டும் வைரலாகும் தோனி - ஜடேஜாவின் பாசப் பிணைப்பு!

ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய ஜடேஜாவின் இன்ஸ்டா வரவு - மீண்டும் வைரலாகும் தோனி - ஜடேஜாவின் பாசப் பிணைப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரர் ரவீந்திர ஜடேஜா, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மீண்டும் இணைந்துள்ளார். ஜடேஜா ஏற்கனவே பயன்படுத்தி வந்த தனது பழைய இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கியிருந்த நிலையில், தற்போது புதிய கணக்கை உருவாக்கி மீண்டும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.புதிய கணக்கில், அவர் முன்னர் பயன்படுத்திய அதே சுயவிவரப் படத்தை (DP) வைத்துள்ளார்.2023ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.குறித்த போட்டியில், இறுதி நேரத்தில் ஒரு பந்தில் 3 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதிப் பந்தை எதிர்கொண்ட ஜடேஜா, 4 ஓட்டங்களைப் பெற்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.இதன்போது, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக இருந்த மகேந்திர சிங் தோனி, ஜடேஜாவைத் தூக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்தக் காட்சி இடம்பெற்ற நிழற்படம் அப்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலானது.தற்போது, அந்தப் நிழற்ப்படத்தையே ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் சுயவிவரப் படமாக வைத்துள்ளார்.இதன் மூலம் ஜடேஜா மீண்டும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளமை அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விபரங்களுக்கு
இலங்கை தொடர் நிறைவு: எம்.எஸ்.தோனியுடன் விருந்தில் கலந்துகொண்ட ரிஷப் பண்ட்!!

இலங்கை தொடர் நிறைவு: எம்.எஸ்.தோனியுடன் விருந்தில் கலந்துகொண்ட ரிஷப் பண்ட்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி மற்றும் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான ரிஷப் பண்ட் ஆகியோர் தங்களது நண்பர்களுடன் இணைந்து விருந்து ஒன்றில் பங்கேற்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததை அடுத்து, இவர்கள் இருவரும் தங்களது நண்பர்களுடன் இணைந்து இந்த விருந்தொன்றில் பங்கேற்றுள்ளனர்.இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, வெளிநாட்டு அல்லது நடுநிலையான மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய விக்கெட் காப்பாளர் என்ற தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்தார்.ரிஷப் பண்ட் 2,534 ஓட்டங்களைப் பெற்று , தோனியின் (2,496 ஓட்டங்கள்) சாதனையை முறியடித்துள்ளார்.அத்துடன் , டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் அடம் கில்கிறிஸ்டை (100 சிக்ஸர்கள்) பின்னுக்குத் தள்ளி ரிஷப் பண்ட் (102 சிக்ஸர்கள்) 3 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.

விபரங்களுக்கு
மகளிருக்கான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில்  புதிய வரலாற்று சாதனைப் படைத்த சமரி அத்தபத்து : 5 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!

மகளிருக்கான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாற்று சாதனைப் படைத்த சமரி அத்தபத்து : 5 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!

இந்தோனேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து வெறும் 5 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.இது சர்வதேச மகளிர் இருபதுக்கு 20 வரலாற்றில் பதிவான 5 ஆவது சிறந்த பந்துவீச்சு பெறுவி ஆவதுடன், சமரி அத்தபத்துவின் கிரிக்கெட் வாழ்க்கையில் பதிவான சிறந்த பந்துவீச்சுப் பதிவுமாகும்.இந்தப் போட்டியில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 'ஹெட்-ட்ரிக்' (Hat-trick) சாதனை படைத்ததன் மூலம், மகளிர் இருபதுக்கு 20 போட்டியில் ஹெட்-ட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதலாவது இலங்கை வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சர்வதேச கால்பந்தாட்ட ஓய்வு: மெஸ்ஸியின் உருவத்தில் 'ஷ்னிட்செல்' தயாரித்து ஆர்ஜென்டீனா ரசிகர்கள் மரியாதை!

சர்வதேச கால்பந்தாட்ட ஓய்வு: மெஸ்ஸியின் உருவத்தில் 'ஷ்னிட்செல்' தயாரித்து ஆர்ஜென்டீனா ரசிகர்கள் மரியாதை!

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi), ஆர்ஜென்டீனா ரசிகர்கள் வினோதமான மற்றும் நெகிழ்ச்சியான முறையில் தங்களது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.ஆர்ஜென்டீனாவின் புவெனஸ் அயர்ஸ் (Buenos Aires) நகரில் உள்ள உணவகம் ஒன்றில், ஆர்ஜென்டீனாவின் பாரம்பரிய இறைச்சி உணவான 'ஷ்னிட்செல்' (Schnitzel - மெல்லியதாகத் தட்டையாக்கப்பட்ட இறைச்சித் துண்டு) மெஸ்ஸியின் உருவ அமைப்பில் வடிவமைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பட்டு வருகிறது. மெஸ்ஸி சர்வதேசக் கால்பந்தாட்டத்தில் இருந்து விடைபெறுவதை முன்னிட்டு இந்தச் சிறப்பு உணவுப் பண்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஆர்ஜென்டீனாவுக்கு உலகக்கிண்ணத்தை வென்று தந்த தங்களின் நட்சத்திர நாயகனுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், பல்வேறு புதுமையான நிகழ்வுகள் மூலமாகவும் தங்களது நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

விபரங்களுக்கு
2027ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மாற்றம்

2027ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மாற்றம்

இலங்கையில் நடைபெறவிருந்த முதலாவது ஐசிசி மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடரை (ICC Women's Champions Trophy), இந்தியாவில் நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில், இலங்கை அரசாங்கத்தின் தலையீடுகள் உள்ளதாகக் குறிப்பிட்டு, இந்தியாவுக்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த தொடரானது 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவின், மும்பை நகரில் நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விபரங்களுக்கு
இலங்கை 'ஏ' அணியில் திக்வெல்ல மற்றும் சாமிக்க: இளம் வீரர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

இலங்கை 'ஏ' அணியில் திக்வெல்ல மற்றும் சாமிக்க: இளம் வீரர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை 'ஏ' அணியில் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் சாமிக்க கருணார்தன ஆகியோர் பெயரிடப்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், தற்போதைய உள்ளூர் இருபதுக்கு இருபது போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட விஷேன் ஹலபகே, ட்ரவின் மெத்யூ மற்றும் கருக்க சங்கேத் போன்ற இளம் வீரர்கள் இலங்கை 'ஏ' அணியில் தங்கள் இடங்களை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருட உள்ளூர் இருபதுக்கு இருபது தொடரின் நாயகனாகத் திகழ்ந்த விஷேன் ஹலபகே, இந்த முறை 15 பந்துகளில் அதிரடியாக 50 ஓட்டங்களைக் குவித்து ஒரு அதிரடித் துடுப்பாட்ட வீரராகப் பிரகாசித்திருந்தார். இந்தநிலையில் விஷேன் ஹலபகே உட்பட பல புதிய கிரிக்கெட் வீரர்களை இந்த தேர்வில் புறக்கணித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களுக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன்படி, 50 ஓவர் மற்றும் இருபதுக்கு 20 ஆகிய இரு வடிவங்களிலும் இலங்கை அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சரித் அசலங்க துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதன்படி ஒரு நாள் போட்டியில் குசல் மெண்டிஸ் (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), பெத்தும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, . கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, . தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க,துனித் வெல்லாலகே, தீக்ஷண,சச்சிந்து கொழும்புக்கே, துஷ்மந்த சமீர, இஷான் மலிங்க, அசித பெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்க ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதேவேளை, இருபதுக்கு 20 போட்டி அணியில் குசல் மெண்டிஸ் (தலைவர்) , சரித் அசலங்க (உப தலைவர்), கமிந்து மெண்டிஸ், பத்தும் நிஸ்ஸங்க, கமில் மிஷார ,லஹிரு உதார, ஜனித் லியனகே, தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, தீக்ஷண, தருந்து ரத்நாயக்க, துஷ்மந்த சமீர, இஷான் மலிங்க, நுவான் துஷார, பினுர பெர்னாண்டோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இலங்கை அணி இங்கிலாந்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.இதற்காக இலங்கை அணி எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதி இங்கிலாந்து நோக்கி புறப்படவுள்ளது.

விபரங்களுக்கு
125 மில்லியன் பவுண்ட் ஒப்பந்தம் செய்து கொண்ட ஆர்ஜன்டீன வீரர் என்சோ பெர்னாண்டஸ்

125 மில்லியன் பவுண்ட் ஒப்பந்தம் செய்து கொண்ட ஆர்ஜன்டீன வீரர் என்சோ பெர்னாண்டஸ்

செல்சீ அணியில் விளையாடிய மிட்பீல்டர் என்சோ பெர்னாண்டஸை 125 மில்லியன் பவுண்ட் என்ற இணக்கமான பிரித்தானிய பரிமாற்றச் சாதனைக் கட்டணத்தில் மென்செஸ்டர் சிட்டி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் மென்செஸ்டர் சிட்டி அணியின் ஒட்டுமொத்த செலவு, பிரீமியர் லீக் சாதனையான 458 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது. இது கடந்த கோடைகாலத்தில் லிவர்பூல் செலவிட்ட 415 மில்லியன் பவுண்ட் சாதனையை முறியடித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் பென்ஃபிக்கா அணியிலிருந்து 107 மில்லியன் பவுண்ட் சாதனைக் கட்டணத்தில் செல்சீயில் இணைந்த 25 வயதான அர்ஜென்டினா வீரரான என்சோ பெர்னாண்டஸ், கடந்த கோடைகாலத்தின் இறுதி நாளில் அலெக்சாண்டர் ஐசக்கிற்காக லிவர்பூல் செலுத்திய 125 மில்லியன் பவுண்ட் தொகையை இந்த முறை சமன் செய்துள்ளார்.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

10 பில்லியன் டொலரைத் தாண்டிய இலங்கையின் ஏற்றுமதி வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2026 ஆம் ஆண்டில் தொடர்ந்து வலிமையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.அதன்படி, 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ஈட்டப்பட்ட மதிப்பிடப்பட்ட மொத்த ஏற்றுமதி வருமானம் 10.49 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.5 சதவீத அதிகரிப்பாகும்.ஒட்டுமொத்த ஏற்றுமதிச் செயல்பாட்டிற்குப் பொருட்கள் ஏற்றுமதியே அதிக பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தத் துறை 8.19 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.05 சதவீத அதிகரிப்பாகும். இலங்கை சுங்கத் திணைக்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகள் மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறை மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பான மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி மதிப்புகளின் அடிப்படையில், 2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.29 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. எனினும், இது 2025 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 1.3 சதவீத சிறிய வீழ்ச்சியைக் குறிக்கிறது.இதற்கிடையில், சேவை ஏற்றுமதித் துறையும் தனது நேர்மறையான வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் இந்தத் துறை 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிடப்பட்ட வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.02 சதவீத அதிகரிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேவை ஏற்றுமதியானது தொடர்ந்து விரிவடைந்து, 2026 ஜூலை மாதத்தில் சுமார் 351.92 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 3.75 சதவீத அதிகரிப்பாகும்.இதன் விளைவாக, 2026 ஜூலை மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டின் மூலமான இலங்கையின் ஒருங்கிணைந்த ஏற்றுமதி வருமானம் சுமார் 1.64 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

சுத்தமாக்கப்பட்ட சிவனொளிபாதமலை : சியபத பினான்ஸின் பசுமை முன்னெடுப்பு திட்டம்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது 21ஆவது ஆண்டு நிறைவு மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த '2026 சிவனொளிபாதமலை சுத்திகரிப்பு திட்டம்' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதிஷ ஹேவவித்தாரண மற்றும் சிரேஷ்ட நிர்வாகக் குழுவின் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரே நாளில் சுமார் ஒரு டொன் அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் புனித ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்கான கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிவனொளிபாதமலை சரணாலயம், நாட்டின் அபூர்வ தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் களனி, களு, வளவை ஆகிய முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்டுள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அதிகரித்து வரும் யாத்ரீகர்களின் வருகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். சிவனொளிபாதமலை முதன்மை தலைமைத் துறவி பெங்கமுவே தம்மதின்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், மஸ்கெலிய பிரதேச சபை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் நல்லதண்ணி காவல்துறை ஆகியவற்றின் முழுமையான ஆதரவுடன் இந்த கூட்டுப் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

விபரங்களுக்கு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் சிறப்பு கௌரவம்

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியும் விளையாட்டுத்துறையின் பிரதான அனுசரணையாளருமான Dialog Axiata PLC நிறுவனம், இந்தமுறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களைச் சிறப்பாகக் கெளரவித்துள்ளது.இதற்கமைய, நேற்று (05) இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டு வீரர்களுக்கான மக்கள் வரவேற்பு வீதிப் பேரணியின் போது, Dialog Axiata PLC நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தடகளப் பிரிவில் இலங்கைக்காக முதன்முறையாகத் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, Dialog Axiata PLC நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி சுபுன் வீரசிங்கவினால் சிறப்புப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.2028 லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டி வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாகச் செயற்படும் டயலொக் நிறுவனம், நாட்டின் முதன்மை ஒலிம்பிக் எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க உள்ளிட்ட திறமையாளர்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறையின் முதன்மை அனுசரணையாளராகப் பாலித பண்டார உள்ளிட்ட விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

விபரங்களுக்கு
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
முன்னாள் காதலர்களை மீண்டும் சந்திக்க ஆசையா?

முன்னாள் காதலர்களை மீண்டும் சந்திக்க ஆசையா?

வியட்நாமின் ஹா ஜியாங் (Ha Giang) மலைப்பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் 'காவ் வாய் காதல் சந்தை' (Khau Vai Love Market) உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. எந்தவித வணிகப் பொருட்களும் விற்கப்படாத இந்த சந்தை, பிரிந்துசென்ற முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்வதற்காகவே பிரத்தியேகமாக நடத்தப்படுகிறது.சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக, வேறுபட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த இரு காதலர்கள் குடும்பப் பின்னணி மற்றும் கலாசார வேறுபாடுகளால் இணைய முடியாமல் பிரிந்தனர். எனினும், தங்கள் அன்பைப் போற்றும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறை சந்திர நாட்காட்டியின் 3 ஆம் மாதம் 27 ஆம் திகதியன்று சந்தித்துப் பேசுவது என வாக்குறுதி அளித்தனர்.அவர்களின் இந்த அரிய நினைவைப் போற்றும் வகையிலேயே இத்திருவிழா தொடங்கப்பட்டது.திருமணமான தம்பதிகள் தங்கள் தற்போதைய துணையின் முழு சம்மதத்துடனும் மரியாதையுடனும் தங்களின் முன்னாள் காதலர்களைச் சந்திக்க இங்கு வருகை தருகின்றனர். 3 நாட்களாக நடைபெறும் இந்த விழாவில் பாரம்பரிய இசை, நடனம், உணவு வகைகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.இங்கு பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் முன்னாள் காதலர்கள், தற்போதைய குடும்ப வாழ்க்கையைப் பாதிக்காத வகையில் அன்புடன் மீண்டும் விடைபெற்றுச் செல்கின்றனர்.காதலையும் பழைய நினைவுகளையும் கொண்டாடும் இந்த விசித்திரமான பாரம்பரிய நிகழ்வு, வியட்நாம் நாட்டின் முக்கிய கலாசார அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
விஜய் வெற்றியால் மாறிய திட்டம் : ஜெயிலர் 2 திரைப்படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க ரஜினி முடிவு!

விஜய் வெற்றியால் மாறிய திட்டம் : ஜெயிலர் 2 திரைப்படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க ரஜினி முடிவு!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க (ரீ-ஷூட்) படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய்யை மையப்படுத்தி இடம்பெற்றதாகக் கூறப்படும் சில காரசாரமான வசனங்களில் மாற்றங்களை மேற்கொள்ள ரஜினிகாந்த் மற்றும் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆலோசித்து வருவதாக கொலிவுட் தரப்புக்களில் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொடர்பான அரசியல் பின்னணியில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வசனங்கள், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு மாற்றப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது தொடர்பில் படக்குழு தரப்பில் இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
ரகசியமாக லண்டனுக்குச் சென்ற த்ரிஷா... குஷ்புவிடம் சிக்கியது எப்படி? : குஷ்பு வெளியிட்ட வைரல் நிழற்படம்!

ரகசியமாக லண்டனுக்குச் சென்ற த்ரிஷா... குஷ்புவிடம் சிக்கியது எப்படி? : குஷ்பு வெளியிட்ட வைரல் நிழற்படம்!

நடிகை த்ரிஷா கிருஷ்ணன் லண்டனுக்குச் சென்றிருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், அவருடன் தொடர்புடைய நிழற்படம் ஒன்றை நடிகை குஷ்பு சுந்தர் வெளியிட்டுள்ளார். த்ரிஷா தனது லண்டன் பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் எந்தவொரு பதிவையும் வெளியிடாத நிலையில், குஷ்பு சுந்தர் வெளியிட்ட நிழற்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. த்ரிஷா லண்டனில் தனது தோழிகளுடன் இருந்தபோது, அங்கு சென்ற இந்தியப் பெண் ஒருவர் அவரை அடையாளம் கண்டு காணொளிப் பதிவு செய்து, அதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து த்ரிஷாவின் லண்டன் பயணம் குறித்து ரசிகர்கள் அறிந்து கொண்டனர். இந்நிலையில், குஷ்பு சுந்தரின் மூத்த மகள் அவந்திகாவும் லண்டனில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவந்திகாவும் த்ரிஷாவும் கையில் ஐஸ்க்ரீமுடன் மகிழ்ச்சியாக போஸ் கொடுத்த நிழற்படத்தை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அந்தப் நிழற்படத்துடன், “லண்டனில் என் டார்லிங்ஸ்” எனக் குறிப்பிட்டு இதயக் குறியீட்டையும் குஷ்பு பதிவிட்டுள்ளார். குஷ்புவின் இந்தப் பதிவைப் பார்த்த த்ரிஷாவின் ரசிகர்கள், த்ரிஷாவின் லண்டன் பயணம் தொடர்பாக அவர் ஏன் எந்தப் பதிவையும் வெளியிடவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், த்ரிஷாவின் பயணம் குறித்து பலரும் காணொளிகளை வெளியிட்டு வரும் நிலையில், அவர் அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் ஒரு பதிவு வெளியிட்டிருந்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே, குஷ்பு வெளியிட்டுள்ள த்ரிஷா மற்றும் அவந்திகாவின் நிழற்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

விபரங்களுக்கு

"ரதிமா பாடலை 100 முறைக்கும் மேல் கேட்டிருப்பேன்" சாய் அபயங்கரை பாராட்டிய இயக்குநர் அட்லீ

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் ரதிமா பாடலை இயக்குநர் அட்லீ 100 முறைக்கும் மேல் கேட்டுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார். தனியிசைப் பாடல்கள் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாய் அபயங்கர். தமிழில் டியூட், கருப்பு, ஓம் என பல திரைப்பட பாடல்களை இசையமைத்து வந்தாலும் மறுபுறம் தனியிசைப் பாடல்களையும் இசையமைத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் வெளியான கருப்பு திரைப்படத்தில் இவரின் இசை பெரிதும் பேசப்பட்ட நிலையில், அதே சமயம் வெளியான அவரது ‘பவழ மல்லி’ பாடலும் பெரியளவில் ஹிட் ஆனது. இதனைதொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி தனியிசைப் பாடலான ரதிமா பாடல் வெளியானது. விவேக் எழுதிய இந்தப் பாடலைப் பாடி, இசையமைத்திருந்தார் சாய் அபயங்கர். இந்தப் பாடலும் வைரலாகியது. இந்தநிலையில் "ரதிமா பாடல் மிகவும் பிடித்துள்ளது, இந்தப் பாடல் வெளியானதில் இருந்து 100 முறைக்கும் மேல் கேட்டிருப்பேன். ஒவ்வொரு முறையும் முன்னதைவிட நன்றாக இருக்கிறது. மிக மிக பெருமையாக இருக்கிறது சாய். நீங்கள் மெட்டமைத்துள்ள விதம், ஒவ்வொரு பாடலையும் வெளியிடும் விதம் மற்றும் முந்தைய பாடலை முந்தும் அளவுக்குச் சிறப்பாக செய்து வருகிறீர்கள் என இயக்குநர் அட்லீ பாடல் குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு

"நல்ல குணம் OK... ஆனால் உயரம் போதாது - திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் காரணத்தால் சர்ச்சை

நல்ல குணம் மற்றும் பண்புகள் இருந்தும், உயரம் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டு நபர் ஒருவரைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.X தளத்தில் பதிவிட்டுள்ள குறித்த பெண், "நேற்று நான் ஒருவரை நிராகரித்தேன், ஏனெனில் அவர் என் விருப்பத்திற்கேற்ப உயரமாக இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். அவரிடம் வேறு எந்தக் குறையும் இல்லை, அவர் கனிவாகவும் மரியாதையாகவும் நடந்துகொண்ட போதிலும், உடல் ரீதியான ஈர்ப்பும் முக்கியம் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் நியாயப்படுத்தியுள்ளார்.இணையத்தில் வைரலான இந்தப் பதிவிற்குப் பயனர்கள் கலவையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.அதன்படி, 'குணத்தை விட உருவம் முக்கியமில்லை' என்றும், 'ஈர்ப்பு இல்லாத உறவு நிலைக்காது' என்றும் இருவேறாக விவாதித்து வருகின்றனர்.

விபரங்களுக்கு
நடிகர் ரஜினியுடன் நடனமாடும் கயாடு லோஹர்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நடிகர் ரஜினியுடன் நடனமாடும் கயாடு லோஹர்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நடிகை கயாடு லோஹர் தர்மன் திரைப்படத்தில் சிறப்பு நடனமாட உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்திற்குத் தர்மன் எனப் பெயரிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். தற்போது, இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகை கயாடு லோஹர் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து சிறப்பு நடனமாட உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, நடிகை ஷ்ரேயா சரண் தர்மன் படப்பிடிப்பில் இருக்கும் நிழற்படத்தை வெளியிட்டிருந்தார். இது, சிறப்பு நடனத்திற்குதான் எனத் தகவல் பரவியது. தற்போது, கயாடு லோஹரும் ரஜினியுடன் இணைய உள்ள தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் வானூர்தியில் ரஜினியின் அருகே அமர்ந்து பயணித்த கயாடு, ‘விரைவில் நான் ரஜினி சாருடன் இணைந்து நடிப்பேன் என நம்புகிறேன்’ எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
கர்ப்பம் என்பதை அறியாமலேயே நடனமாடிய நடிகை பூர்ணா - ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்த ஆச்சரியம்

கர்ப்பம் என்பதை அறியாமலேயே நடனமாடிய நடிகை பூர்ணா - ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்த ஆச்சரியம்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘அலாபோலேலோ’ பாடலில் சிறப்பு நடனம் ஆடிய அனுபவம் குறித்து நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி வெளியான ‘அலாபோலேலோ’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் கவனம் ஈர்த்து வருகிறது. இந்தநிலையில், இந்தப் பாடலின் படப்பிடிப்பில் பங்கேற்றபோது தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததாக நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார். தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே பாடலுக்கான நடனக் காட்சிகளில் நடித்ததாகக் கூறியுள்ள பூர்ணா, பாடலின் படப்பிடிப்பை நிறைவு செய்து மற்றொரு திரைப்படத்தில் நடிக்கச் சென்றபோதுதான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததாக தெரிவித்துள்ளார். தற்போது தனது குழந்தைக்கு 5 மாதங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////