நீண்ட தூரப் பயணிகள் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கான தொழில்நுட்ப உபகரணங்களைப் பொருத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேசிய வீதிப் பாதுகாப்புச் சபையின் ஒருங்கிணைப்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் தனியார் பேருந்துகளில் இந்தத் தொழில்நுட்ப உபகரணங்களைப் பொருத்தும் பணிகள் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பையும், சாரதிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதன் முதற்கட்டமாக, நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் 10 பேருந்துகளில் தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்படவுள்ளன.
அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பெறப்படும் முடிவுகளைத் தொடர்ந்து கண்காணித்த பின்னர், அனைத்து பேருந்துகளிலும் இந்த AI தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், பேருந்து பயணத்தை ஆரம்பிக்கும் தருணம் முதல் இலக்கை அடையும் வரை சாரதியின் செயற்பாடுகள் மற்றும் பேருந்தின் உட்புறச் சூழ்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி அல்லது பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டால், அதனை உடனடியாக அடையாளம் காணும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புப் பட்டி அணியாமை, சாரதி சோர்வான நிலையில் இருப்பது, பேருந்தைச் செலுத்திக்கொண்டிருக்கும்போது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பற்ற செயற்பாடுகள் கண்டறியப்பட்டால், பாதுகாப்பு சாதனம் மூலம் உடனடியாகக் குரல் எச்சரிக்கை வழங்கப்படும்.
இதன்மூலம், பாதுகாப்பற்ற நிலைமைகளை உடனடியாகக் கண்டறிந்து, அவற்றைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
Latest News
ஊழல் நபர்களைப் பாதுகாக்க முயல்கிறது ஐக்கிய தேசியக் கட்சி: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடும் விமர்சனம்!
Local
06 September 2026
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு: டெல்லி விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது!
Local
06 September 2026
டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் செம்பியன் பட்டம் வென்று ருமேஷ் தரங்க வரலாற்று சாதனை!
Local
06 September 2026
மெஸ்ஸியின் 10ஆம் இலக்க சீருடைக்கு ஓய்வு இல்லை ஆர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனம் அதிரடி முடிவு!
Local
06 September 2026
தர்ப்பைப் புல்லால் இறுதிச் சடங்கு! வெள்ளத்தின் பின் பரிதவிக்கும் உறவினர்கள்!
Local
06 September 2026
அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை! ஹொர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்!
Local
06 September 2026
காஸாவை உலுக்கிய சோகம்! இடிபாடுகளுக்கு நடுவிலிருந்து மூன்று வருடங்களுக்கு பின் மீட்கப்பட்ட 55 உடல்கள்
Local
06 September 2026
மோசமான தோல்வி! ஆசியக் கிண்ணத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
Local
06 September 2026
விண்வெளியில் அடுத்த உலகப்போர்: பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட பகுதி எதிர்கால போர்க்களமாகும் எனச் சீன ஆய்வில் எச்சரிக்கை!
Local
06 September 2026
யுக்ரைன் போர் அமைதி ஒப்பந்த முயற்சி: மாஸ்கோவில் புதினுடன் அமெரிக்கத் தூதர்கள் சந்திப்பு!
Local
06 September 2026