நாட்டின் ஜனநாயக அமைப்பும் மக்களின் இறையாண்மையும் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் படி இறையாண்மை மக்களுக்கே உரியது என்றும், அதனை அரசாங்கம் சரியாக அங்கீகரிக்கத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வாதிகாரப் போக்குடன் செயற்படாமல், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே தாம் நீதிமன்றத்தை நாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் முறையான காரணங்களின்றி கைது செய்யப்படுவதாகவும், எதிர்க்கட்சிகள், சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் போன்ற அமைப்புகள் முடக்கப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
"தற்போதைய சூழலில் நாடாளுமன்றத்திலிருந்தா? அல்லது பெலவத்தையிலிருந்தா? நாடு ஆளப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை 1946 ஆம் ஆண்டு டி.எஸ். சேனாநாயக உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து சுதந்திர இலங்கையை உருவாக்கியது போல், தற்போதும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டமைக்குத் தாம் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Latest News
இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றம் வரம்பிற்குட்பட்டதாகவே உள்ளது - ஐநா மனித உரிமைகள் அலுவலகம்
Local
08 September 2026
கொழும்பில் சர்வதேச மரதன் போட்டி - உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு!
Local
08 September 2026
அரச நிறுவனங்களில் டிஜிட்டல் புரட்சி: அனைத்துத் துறைகளிலும் புதிய அலகுகளை நிறுவ அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!
Local
08 September 2026
பலத்த காற்று குறித்த எச்சரிக்கை
Local
08 September 2026
ரவி மோகன் – கெனிஷா புகைப்பிடிக்கும் காட்சியால் பரபரப்பு : கோவா காணொளியால் பரவும் புதிய சர்ச்சை!
Local
08 September 2026
டிட்வா பேரழிவினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு கடன் நிதியுதவி
Local
08 September 2026
16 மணி நேர நரகம், 21 உயிரிழப்புகள்: வானூர்தி கடத்தலில் தப்பிய 15 வயதுச் சிறுமியின் இன்றைய நெகிழ்ச்சிப் பதிவு!
Local
08 September 2026
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்: நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி
Local
08 September 2026
2030ஆம் ஆண்டுக்குள் விலங்குகளுடன் மனிதர்கள் உரையாட முடியுமா? AI ஆய்வில் புதிய தகவல்
Local
08 September 2026
தனியார் துறைக்கும் இணையவழி தொடருந்து பருவகாலச் சீட்டு - ஒக்டோபர் 1 முதல் வீட்டிலிருந்தே பெறலாம்!
Local
08 September 2026