எல்லை தாண்டிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளைக் கட்டுப்படுத்துவதுடன், சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு கடந்த மார்ச் 30ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
அதற்கமைய, நாட்டின் எல்லைகளைக் கடந்தும் இடம்பெறும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் ஊடாக தீவிர குற்றங்களைத் தடுப்பதற்கும், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களால் சமூகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளையும் இந்தச் சட்டமூலம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சட்ட வரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Latest News
நாட்டுக்கே உரிய மனித உரிமை ஆணைகள் காலவரையறையின்றி நீடிக்கக் கூடாது – ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை
Local
09 September 2026
நடிகர் அஜித்தின் மறுபக்கம்: படப்பிடிப்புத் தளத்தில் அவர் காட்டும் அன்பு குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி!
Local
09 September 2026
ஒரே ஒரு முடிவு மொத்த வாழ்க்கையையும் மாற்றுமா? : இயக்குநர் ஜேசன் சஞ்சய் வைரல் பேச்சு!
Local
09 September 2026
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் 3 புதிய பாலங்கள் திறப்பு!
Local
09 September 2026
இந்தியா - இலங்கை இடையே மூன்று புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Local
09 September 2026
இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பு - ஜனாதிபதி!
Local
09 September 2026
குறைந்த எடைக் கொண்ட பாணை விற்பனை செய்த 54 இடங்கள் முற்றுகை
Local
09 September 2026
தலவத்துகொடை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது
Local
09 September 2026
சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்காதவர்களுக்கு செப்டம்பர் 30 வரை கால அவகாசம்
Local
09 September 2026
டிட்வா சூறாவளியால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு டிசம்பர் 31 வரை நீடிப்பு
Local
09 September 2026