இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள ராஜ்நாத் சிங்குடன் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால பாதுகாப்பு மற்றும் இராணுவ கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைத் தொடர்வதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
செப்டம்பர் 10ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ராஜ்நாத் சிங், தனது விஜயத்தின் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா மற்றும் உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அமுலாக்கத்தை மதிப்பாய்வு செய்வதும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும். இதனையொட்டி, கொழும்பு போக்குவரத்துப் பிரிவு, சிறப்புப் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

Latest News
அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம்
Local
09 September 2026
22வது அரசியலமைப்புத் திருத்தம்: ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு சஜித் பிரேமதாச கேள்வி
Local
09 September 2026
காலாவதியான தேயிலைத் தூள் விற்பனை: நிறுவனத்துக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம்!
Local
09 September 2026
இலக்கத்தகடு நிலுவை பிரச்சினை ஆறு மாதங்களில் தீர்க்கப்படும்- மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம்!
Local
09 September 2026
பேரழிவில் கைக்கொடுத்த இந்தியா: பிரதமர் ஹரிணியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
Local
09 September 2026
மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பியோட்டம்
Local
09 September 2026
திருமணம் ஒரு கட்டாயமல்ல; வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம்: நடிகை ரம்யா பரபரப்பு கருத்து!
Local
09 September 2026
தவெக கூட்டணியின் அதிரடி வியூகம் – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர்!
Local
09 September 2026
குடியிருப்புகளுக்கு அருகில் உலா வரும் சிறுத்தை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
09 September 2026
காலக்கெடு கடந்தும் விடுவிக்கப்படாத வாகனங்கள் - விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை
Local
09 September 2026