இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைப் பயணத்தையொட்டி, இந்திய கடற்படையின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல்நோக்கு மறைமுகப் போர்க்கப்பலான 'ஐ.என்.எஸ் உதயகிரி', மூன்று நாள் செயல்பாட்டுப் பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று (08) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் தகவல்படி, நடமாடும் பயிற்சிக் குழுவின் மூலம் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் அனுபவப் பகிர்வு வழியாக இலங்கை கடற்படையுடனான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், இந்தப் போர்க்கப்பல் இலங்கை கடற்படை மற்றும் வானூர்திப்படை ஆகிய இரண்டிற்கும் தேவையான அத்தியாவசிய இயந்திரங்கள் மற்றும் உபகரண உதிரிப்பாகங்களையும் கொண்டு வந்துள்ளது.
இலங்கைக்கான இந்தப் பயணத்தின் போது, கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் விகாஸ் சூட், மேற்கு கடற்படைப் பகுதியின் தளபதியான ரியர் அட்மிரல் ஜி.எச்.எஸ்.இ. டி சில்வாவை உத்தியாகபூர்வமாக சந்திக்கவுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சரின் பயணத்தின் ஒரு பகுதியாக, இலங்கை பிரமுகர்களுக்காக ஐ.என்.எஸ் உதயகிரி கப்பலில் விசேட வரவேற்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, கப்பலின் குழுவினர் தங்களது இலங்கை கடற்படைச் சகாக்களுடன் தொழில்முறை மற்றும் விளையாட்டுத் தொடர்புகளில் ஈடுபடவுள்ளதுடன், "க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்திற்கு ஆதரவாகக் கொழும்பில் நடைபெறும் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Latest News
ஆரோக்கிய பால்மாவில் புழுக்கள் - பிபாஷா பாசு வெளியிட்ட காணொளியால் பரபரப்பு
Local
11 September 2026
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் ரவி மோகன்: புதிய போஸ்டர் வெளியீடு
Local
11 September 2026
ஷிரான் பாசிக்கின் தந்தை கைது
Local
11 September 2026
கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்
Local
11 September 2026
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி மீட்பு
Local
11 September 2026
கழுத்தில் டயருடன் உலா வந்த காட்டு யானை! வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை
Local
11 September 2026
அரசாங்கத்திற்கு எதிராக செப்டம்பர் 12 பேரணி - விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்பு!
Local
11 September 2026
ஹர்மன்ப்ரீத் கவுரின் அசத்தலான பிடிப்பா? வைரலாகும் காணொளியின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மை!
Local
11 September 2026
கர்ப்பகாலத்தில் பெரசிட்டமோல் - பெண் குழந்தைகளின் எதிர்கால இனப்பெருக்கத் திறனை பாதிக்குமா?
Local
11 September 2026