சிறுவர்களுடன் உடல்ரீதியான தொடர்புகள் குறித்து விவாதிக்கும்போது சிறுவர்களின் சம்மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என சிறுவர் உரிமைகள் ஆர்வலரும், 'Stop Child Cruelty Trust' அமைப்பின் தலைவருமான மருத்துவர் துஷாரா விக்ரமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
“நல்ல தொடுதல், தவறான தொடுதல்” என்ற கருத்துக்கு அப்பால், தன்னைத் தொடுவதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் உரிமையும் சிறுவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்வாதிகள் மற்றும் சிறுவர்கள் இடம்பெறும் சில நிழற்படங்களை சுட்டிக்காட்டிய அவர், சிறுவர்களின் சம்மதம் அல்லது விருப்பம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு உடல் தொடர்பும் பொருத்தமற்றதாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு மனுவொன்றை சமர்ப்பிக்க வந்த சிறுமியிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “நான் உங்கள் தோளில் கையை வைக்கலாமா?” எனக் கேட்டு, சிறுமியின் சம்மதத்தைப் பெற்ற பின்னரே அவ்வாறு செய்த சம்பவத்தை அவர் பாராட்டியுள்ளார்.
சிறுவர்களின் விருப்பத்தை மதிப்பதற்கான சிறந்த உதாரணமாக இது அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்கள் தங்களுக்கு விருப்பமில்லாத விடயங்களுக்கு “இல்லை” என்று கூறும் உரிமையை வழங்குவது அவர்களை வலுப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களின் விருப்பத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு உடல் தொடுதலும், அவர்களின் உரிமையை மீறும் செயலாகவோ அல்லது பொருத்தமற்ற தொடுதலாகவோ கருதப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டில் நடைமுறையில் உள்ள சிறுவர்கள் பாதுகாப்புக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தப்படுவதில்லை எனவும், சிறுவர்களின் உரிமைகள் தொடர்பில் பெரியவர்களும் அரசியல்வாதிகளும் போதிய விழிப்புணர்வுடன் செயற்படுவது மிகவும் அவசியம் எனவும் மருத்தவுர் துஷாரா விக்ரமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
Latest News
கொழும்பில் 40 வருட பழமையான வீட்டுத்தொகுதிகள்: பிரதி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Local
13 September 2026
இலங்கைக்கு வருகை தந்த IMF குழு: நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்!
Local
13 September 2026
ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவு சட்டவிரோதமானது: அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
Local
13 September 2026
தொடருந்து போக்குவரத்தில் எடுக்கப்பட்ட விசேட தீர்மானம்: தொழிற்சங்கங்கள் அதிரடி முடிவு!
Local
13 September 2026
சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் பரபரப்பு: விபத்தில் சிக்கிய அஜித்குமாரின் சிற்றூந்து!
Local
12 September 2026
"திருட வேண்டாம் என்று அன்றே தந்தை சொல்லியிருக்க வேண்டும்" - ஜனாதிபதி அநுர!
Local
12 September 2026
"இரும்பு கம்பிகளுக்கு மத்தியிலும் உங்களை நான் பார்க்கிறேன்” சிறையிலிருந்து நாமல் செய்தி!
Local
12 September 2026
கம்பஹாவில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!
Local
12 September 2026
லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்!
Local
12 September 2026
தெஹிவளை கைக்குண்டு வீச்சில் இரு சிறுவர்கள் பலியானமை தொடர்பில் ஐ.நா கவலை!
Local
12 September 2026