இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் தொடர்ந்து உறுதிப்படுத்துவதற்கு இலங்கை தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மற்றும் பிராந்திய நலன்களை கருத்திற்கொண்டே இலங்கை தனது தீர்மானங்களை மேற்கொள்வதாகவும், இறையாண்மை கொண்ட நாடாக பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களில் ஈடுபடும்போது பிராந்திய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பாதுகாப்புப் படைகளின் திறன் மேம்பாடு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இன்று பரிமாறிக்கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதேவேளை,இலங்கை எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடியான சந்தர்ப்பங்களில் இந்தியா வழங்கிய ஆதரவுக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை மோதல்கள் அற்ற அமைதியான பிராந்தியமாக பேணுவதற்கு இலங்கை வழங்கி வரும் பங்களிப்பை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் அவர் பாராட்டியுள்ளார்.

Latest News
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதலில் இரண்டு சிறார்கள் பலி தந்தை படுகாயம்
Local
11 September 2026
கியானி இன்ஃபான்டினோவுக்கான தமது ஆதரவை விலக்கிக்கொண்ட பிரான்ஸ் கால்பந்தாட்ட அமைப்பு!
Local
11 September 2026
சிரேஷ்ட அமெரிக்கர்களுக்கு 5 ஆயிரம் டொலர்களை வழங்கப்போகும் ட்ரம்ப்!
Local
11 September 2026
20 ஆண்டுகளாக ஒரே எண்களைத் தேர்ந்தெடுத்து லொத்தரில் ரூ.1.30 கோடி வென்ற பெண்!
Local
11 September 2026
தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்!
Local
11 September 2026
ஹவுதி அமைப்பிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை: "செங்கல்லுக்கு பதிலாக கல்லைக் கொண்டு பதிலடி தரத் தேவையில்லை
Local
11 September 2026
ஆசிய செம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோவின் அல்-நஸர்: 3 ஆவது தொடர்ச்சியான கிண்ணத்தை வெல்ல சவுதி அணிகள் தீவிரம்!
Local
11 September 2026
லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
Local
11 September 2026
மகளிர் ஆசியக் கிண்ணம் : 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் அணி!
Local
11 September 2026
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு!
Local
10 September 2026