பொகவந்தலாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தேயிலைத் தோட்டம் ஒன்றில் சிறுத்தையொன்று அடிக்கடி நடமாடுவதாக, தோட்டத் தொழிலாளி ஒருவர் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார்.
தேயிலைத் தோட்டத்தில் நடமாடிய சிறுத்தையை தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்த குறித்த தொழிலாளி, அந்தப் புகைப்படத்தையும் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த சிறுத்தை இரை தேடி, தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் தினமும் வருவதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவை காவல் நிலையப் பொறுப்பதிகாரி நுவன் மதுசங்க தெரிவித்துள்ளார்.
இதனால், தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, வனவிலங்கு அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவித்து, சிறுத்தையை அருகிலுள்ள போபத்தலாவ வனப்பகுதிக்கு பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த தொழிலாளி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுமக்கள் சிறுத்தையை அணுகவோ, அதனைத் துரத்தவோ அல்லது அச்சுறுத்தவோ வேண்டாம் எனவும், சிறுத்தையின் நடமாட்டம் தொடர்பில் உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Latest News
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதலில் இரண்டு சிறார்கள் பலி தந்தை படுகாயம்
Local
11 September 2026
கியானி இன்ஃபான்டினோவுக்கான தமது ஆதரவை விலக்கிக்கொண்ட பிரான்ஸ் கால்பந்தாட்ட அமைப்பு!
Local
11 September 2026
சிரேஷ்ட அமெரிக்கர்களுக்கு 5 ஆயிரம் டொலர்களை வழங்கப்போகும் ட்ரம்ப்!
Local
11 September 2026
20 ஆண்டுகளாக ஒரே எண்களைத் தேர்ந்தெடுத்து லொத்தரில் ரூ.1.30 கோடி வென்ற பெண்!
Local
11 September 2026
தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்!
Local
11 September 2026
ஹவுதி அமைப்பிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை: "செங்கல்லுக்கு பதிலாக கல்லைக் கொண்டு பதிலடி தரத் தேவையில்லை
Local
11 September 2026
ஆசிய செம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோவின் அல்-நஸர்: 3 ஆவது தொடர்ச்சியான கிண்ணத்தை வெல்ல சவுதி அணிகள் தீவிரம்!
Local
11 September 2026
லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
Local
11 September 2026
மகளிர் ஆசியக் கிண்ணம் : 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் அணி!
Local
11 September 2026
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு!
Local
10 September 2026