General11 September 2026

பொதுப் போக்குவரத்தை மக்களின் இலகுவான தேர்வாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் - பிரதமர்

பொதுப் போக்குவரத்தைப் பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான தேர்வாக மாற்றுவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

“கனவு இலக்கு” (Dream Destination) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்தை நேற்று (10) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொது இடங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் பொதுப் போக்குவரத்து மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்தத் துறைக்கான நிதியை அரசாங்கம் அதிகரித்துள்ளமை பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நகர மேம்பாட்டுப் பிரதியமைச்சர் எரங்க குணசேகர, அடுத்த ஆண்டு தொடருந்து துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், மருதானை முதல் மாக்கும்புர, பாணந்துறை மற்றும் றாகமை ஆகிய மார்க்கங்களை உள்ளடக்கிய மின்சார தொடருந்து அமைப்புக்கான பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes