General12 September 2026

இலங்கையை அச்சுறுத்தும் எல் நினோ: ஒக்டோபரில் கனமழை....பெப்ரவரியில் கடும் வறட்சி!

கடந்த 75 ஆண்டுகளில் இல்லாதவாறு, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 'எல் நினோ' (El Niño) காலநிலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறு 98 வீதமாக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜயமான தெரிவித்துள்ளார்.

முன்னதாக 95 வீதமாக இருந்த இந்த முன்னறிவிப்பு தற்போது 98 வீதமாக அதிகரித்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இருப்பினும், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சில பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவக்கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் கூறினார்.
Related recommendation
Hiru TV News | Programmes