General12 September 2026

மரண தண்டனை குறித்து இன்னும் தீர்மானம் இல்லை: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினருக்கு மன்னிப்பே கிடையாது - ஜனாதிபதி

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்களில் அரசாங்கம் எவ்வித சமரசங்களுக்கோ அல்லது மன்னிப்புக்கோ தயார் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இன்று (12) நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் இயங்கி வரும் ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, வெளிநாடுகளில் இருந்து கொண்டு, உள்நாட்டில் குற்றக் குழுக்களை இயக்கிய 70க்கும் மேற்பட்டோர் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த மரண தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனச் சமூகத்தில் விவாதங்கள் எழுந்துள்ள போதிலும், அது குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும் ஜனாதிபதி மேலும் தெளிவுபடுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes