General12 September 2026

சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் பரபரப்பு: விபத்தில் சிக்கிய அஜித்குமாரின் சிற்றூந்து!

இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் தளத்தில் நடைபெற்று வரும் சிற்றூந்து பந்தயத்தில்,நடிகரும் பந்தய வீரருமான அஜித் குமார் செலுத்திய பந்தய சிற்றூந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

லண்டன் சில்வர்ஸ்டோனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சர்வதேசப் பந்தய வீரர்களுடன் இணைந்து அஜித் குமாரும் போட்டியிட்டு வருகிறார்.

போட்டிக் களத்தில் சிற்றூந்து பந்தயம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக அவரது சிற்றூந்து விபத்தைச் சந்தித்தது.

விபத்தினைத் தொடர்ந்து, அவரது பந்தய சிற்றூந்தை தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாகப் பரிசோதித்துச் சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes