உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இந்த மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
சில எரிபொருள் விநியோக நிறுவனங்கள் சந்தித்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (14) பதிலளித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டுச் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, தற்போதைய நிலையில் விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வது சவாலாக அமைந்துள்ளதாக பல தனியார் எரிபொருள் நிறுவனங்கள் அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி விரைவில் உரிய தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, கடந்த காலங்களைப் போல எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது முறையான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்த போதிலும், நுகர்வோரின் நலனைக் கருத்திற்கொண்டே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும், சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து இந்த மாத இறுதியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Latest News
போக்குவரத்து சமிக்ஞையை மீறி ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய சாரதி மீது சட்ட நடவடிக்கை
Local
15 September 2026
IMAX வசூலில் வரலாறு படைத்த ‘The Odyssey’ திரைப்படம்!
Local
15 September 2026
முன்விரோதத்தால் வந்த வினை - கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழப்பு
Local
15 September 2026
பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் தங்கம், வெள்ளி படிவங்கள் கண்டுபிடிப்பு!
Local
15 September 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local
15 September 2026
அநுராதபுர பேரணியில் புலிப் பிரசார குற்றச்சாட்டு: பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் விசாரணை ஒப்படைப்பு!
Local
15 September 2026
செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 1 வரை ‘தேசிய சிறுவர் தின வாரம்’: அமைச்சரவை அனுமதி
Local
15 September 2026
பொருளாதார நெருக்கடியால் வெடித்த ஆத்திரம்: கடலை நோக்கிச் சத்தமிட்ட விசித்திரக் கூட்டம்!
Local
15 September 2026
2027ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!
Local
15 September 2026
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபரும், தப்பிச் செல்ல உதவிய சாரதியும் கைது
Local
15 September 2026