தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ள போதிலும், அரச அதிகாரம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 159 பெரும்பான்மை இடங்களைப் பெற்று, ஜனாதிபதியை நியமித்து, உள்ளூராட்சி மன்றங்களின் ஆதரவைப் பெற்ற பின்னரும் கட்சி ஏன் தொடர்ந்து மக்கள் பேரணிகளை நடத்தி வருகிறது என்று சிலர் யோசிக்கலாம் எனச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.
நாம் ஏன் இவ்வாறு செய்கிறோம்? நமக்கு என்ன வகையான அதிகாரம் கிடைத்துள்ளது? நமக்கு ஆட்சிஅதிகாரம் மட்டுமே கிடைத்துள்ளது.
அரச அதிகாரம் என்று இன்னுமொரு பகுதி உள்ளது. இந்த அதிகாரம் நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பெறக்கூடிய ஒன்றல்ல.
அரச அதிகாரம் என்பது அரச கட்டமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பின் ஊடாக முன்னேறிச் செல்வதாகும்.
அரசாங்க திட்டங்கள் அரச அதிகாரத்தின் மூலமே செயற்படுத்தப்படுகின்றன. அரச அதிகாரத்தை ஒரே நாளில் பெற முடியாது.
அதைப் பெறுவதற்கு காலம் எடுக்கும் இது நிர்வாகத்திற்கான காலகட்டம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரம் மற்றும் அரச அதிகாரத்தை எவ்வாறு பெற முடியும் என்பது குறித்து மேலும் விளக்கிய பிரதியமைச்சர், 1988/89 ஆம் ஆண்டுகளில் ஆட்சி அதிகாரமும் அரச அதிகாரமும் வன்முறை மூலமே கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், உலக வரலாற்றில் முதல்முறையாக ஆட்சி அதிகாரம் மற்றும் அரச அதிகாரம் ஆகிய இரண்டும் ஜனநாயக வழியில் பெறப்பட்டு வருகின்றன.
இதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு முன்மாதிரிகள் எதுவும் இல்லை. தேசிய மக்கள் சக்தியைத் தவிர, உலகில் வேறு எந்த அரசியல் கட்சியும் இந்த வழியில் அதிகாரத்தைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனநாயக வழியில் அதிகாரத்தைப் பெற்று, இலங்கையை அபிவிருத்தி செய்வதை நோக்கி தேசிய மக்கள் சக்தி செயற்பட்டு வருகிறது என்பதை உலகிற்கு தெரியப்படுத்துவது அவசியமானது என்றும், அதனாலேயே கட்சி தொடர்ந்து மக்கள் பேரணிகளை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Latest News
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை
Local
16 September 2026
நேரலையில் கோர விபத்து : அமெரிக்காவில் செய்தி நிறுவன உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு!
Local
16 September 2026
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்
Local
16 September 2026
எல் நினோ தாக்கம் : அடுத்த 2 மாதங்களில் இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரிய காலநிலை மாற்றம்!
Local
16 September 2026
மீண்டும் டெங்கு தலைதூக்கலாம் -விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Local
16 September 2026
மெக்காவை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது : சவூதி கூட்டுப்படை விளக்கம்!
Local
16 September 2026
களுத்துறையில் தொடருந்து மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!
Local
16 September 2026
வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு : இறுதி கெடு அறிவிப்பு - தவறினால் அபராதம் மற்றும் வட்டி!
Local
16 September 2026
ஜப்பானில் 100 வயதைக் கடந்த முதியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து சாதனை!
Local
16 September 2026
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்!
Local
16 September 2026