நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்த சம்பவங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யக்கலமுல்ல மற்றும் கொட்டாஞ்சேனை காவல்துறை பிரிவுகளில் இந்தச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யக்கலமுல்ல காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மொரகெட்டிய பகுதியில், நேற்று நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
முன்விரோதம் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யக்கலமுல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நபர் ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கொட்டாஞ்சேனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
நாட்டை விட்டு வெளியேற முயற்சியா? - சிரந்தி ராஜபக்ஷ விவகாரத்தில் வெளியான உண்மைப் பின்னணி!
Local
16 September 2026
ருமேஷ் தரங்கவின் ஈட்டிகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து வானூர்தி நிறுவனத்திடம் விசாரணை
Local
16 September 2026
எயார்பஸ் நிதி முறைகேடு - நாமல் ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை!
Local
16 September 2026
இலங்கை - தாய்லாந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணக்கம் : விசா விலக்கு தொடர்பிலும் கவனம்!
Local
16 September 2026
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் சுகாதார அபாயம்: பாகிஸ்தான் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை
Local
16 September 2026
இந்திய மதிப்பில் ரூ.100 கோடி மோசடி வழக்கு: தமிழக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை
Local
16 September 2026
20 வருட காதல் பயணம் : மீண்டும் ஒருமுறை திருமண பந்தத்தில் இணைந்த சூர்யா - ஜோதிகா!
Local
16 September 2026
நாட்டில் கடந்த ஆண்டில் வேலையின்மை விகிதம் 3.9 வீதமாகப் பதிவு
Local
16 September 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
Local
16 September 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு ஒக்டோபருக்கு ஒத்திவைப்பு!
Local
16 September 2026