கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில், தெல்கந்த சந்திக்கு அருகில் சிவப்பு போக்குவரத்து சமிக்ஞையை சட்டவிரோதமான முறையில் மீறிச் சென்றதாகக் கூறப்படும் பேருந்தின் சாரதிக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த செப்டெம்பர் 12ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
குறித்த காணொளியில், போக்குவரத்து சமிக்ஞை சிவப்பு நிறத்தில் காணப்பட்டபோது, பேருந்து அந்தச் சந்தியின் இடதுபுறமுள்ள வீதிக்குள் திருப்பப்பட்டுள்ளது.
பின்னர், பிரதான வீதியில் உள்ள சிவப்பு சமிக்ஞையைத் தவிர்த்து குறுக்கு வீதி வழியாகச் சென்று மீண்டும் பிரதான வீதியில் இணையும் வகையில் பேருந்து செலுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பேருந்தின் உரிமையாளர் மிரிஹான போக்குவரத்துக் காவல் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதன்போது, சம்பவம் இடம்பெற்ற வேளையில் பேருந்தைச் செலுத்திய சாரதியை மூன்று நாட்களுக்குள் காவல் நிலையத்தில் முன்னிலைப்படுத்துமாறு பேருந்தின் உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், குறித்த சாரதி போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளாரா? என்பதைக் கண்டறிவதற்காக, போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் சாரதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Latest News
மட்டக்குளி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு: 12 பேர் மருத்துவமனையில்!
Local
16 September 2026
அதானியைப் பின் தள்ளி ஆசிய செல்வந்தர் பட்டியலில் டிக்டொக் நிறுவுனர் முதலிடம்!
Local
16 September 2026
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனைகளில் புதிய கட்டடங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல்
Local
16 September 2026
5 ஆவது மகளிர் பிரீமியர் லீக் (WPL): ஏலம் ஒக்டோபரில் - ஜனவரியில் தொடர் ஆரம்பம்!
Local
16 September 2026
கொசோவோ முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
Local
16 September 2026
மகனுக்காக ஒதுங்கிக்கொண்ட தளபதி: ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ் - வெளியான அதிரடி அறிவிப்பு
Local
16 September 2026
டிட்வா சூறாவளியை தொடர்ந்து 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தில்!
Local
16 September 2026
செப். 25 முதல் பொல்கொல்ல நீர்த்தேக்கம் வெறுமையாக்கப்படும்: கொத்மலை நீர்மின் உற்பத்தியும் இடைநிறுத்தம்!
Local
16 September 2026
சூர்யா - ஜோதிகாவின் ‘20 Years of Love & War’ காணொளி : 13 மணி நேரத்தில் 4.8 கோடி பார்வைகள்!
Local
16 September 2026
தாய்மாமனின் மாபெரும் பரிசு - மதுரை செல்கிறார் முதலமைச்சர் விஜய் - அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு அதிஷ்டம்!
Local
16 September 2026