2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதிப் பணத்தைச் செலுத்துவதற்கான கடைசித் திகதி 2026 செப்டம்பர் 30 என வரி செலுத்துவோருக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நினைவூட்டியுள்ளது.
அபராதங்கள் மற்றும் வட்டி விதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், வருமான வரி செலுத்த வேண்டிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது வரிகளை செப்டம்பர் 30-க்கு முன்னதாக அல்லது அன்றைய தினத்திற்குள் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பு நிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி மற்றும் பங்கான்மை வருமான வரி ஆகியவற்றுக்குப் பொருந்தும்.
வரிகளை IRD இன் இணையவழி வரி செலுத்தும் தளம் (Online Tax Payment Platform) மூலமாகச் செலுத்தலாம்.
அத்துடன், நிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி மற்றும் பங்கான்மை வருமான வரிகளை இலங்கை வங்கியின் (Bank of Ceylon) எந்தவொரு கிளையிலும் செலுத்த முடியும்.
வரிகளைச் செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால் அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படும் என்றும், தாமதமாகச் செலுத்துவதற்காக விதிக்கப்படும் வட்டியைத் தள்ளுபடி செய்யவோ குறைக்கவோ முடியாது என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்தநிலையில், உதவி தேவைப்படும் வரி செலுத்துவோர் 1944 என்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
நாட்டில் கடந்த ஆண்டில் வேலையின்மை விகிதம் 3.9 வீதமாகப் பதிவு
Local
16 September 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
Local
16 September 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு ஒக்டோபருக்கு ஒத்திவைப்பு!
Local
16 September 2026
கலகொடஅத்தே ஞானசார தேரரின் வழக்கு மீண்டும் இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
16 September 2026
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை
Local
16 September 2026
நேரலையில் கோர விபத்து : அமெரிக்காவில் செய்தி நிறுவன உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு!
Local
16 September 2026
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்
Local
16 September 2026
எல் நினோ தாக்கம் : அடுத்த 2 மாதங்களில் இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரிய காலநிலை மாற்றம்!
Local
16 September 2026
மீண்டும் டெங்கு தலைதூக்கலாம் -விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Local
16 September 2026
மெக்காவை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது : சவூதி கூட்டுப்படை விளக்கம்!
Local
16 September 2026