பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (16) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தொடருந்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பணிப்புறக்கணிப்பு போராட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாவதற்கு முன்னரே, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலைக்கான இரவுநேர அஞ்சல் தொடருந்து (Night Mail) மற்றும் மாலை நேர விரைவுத் தொடருந்து சேவைகள் உள்ளிட்ட பல தொலைதூரச் சேவைகளை தொடருந்து திணைக்களம் இரத்து செய்துள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், சில தொடருந்து சேவைகள் இலக்கை அடைவதற்கு முன்னரே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து 14 நாட்களுக்கு முன்னரே அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ இதுவரை பேச்சுவார்த்த நடத்தி தீர்வு காணத் தவறிவிட்டதாக தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர் தலைமைத்துவம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், திணைக்களத்தில் நாளாந்தம் இயங்கும் தொடருந்து சேவைகளின் எண்ணிக்கை 450 இலிருந்து 184 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பருவகால பயணச்சீட்டு (Season tickets) விநியோகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

Latest News
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீச்சிக்கு வாய்ப்பு
Local
18 September 2026
இலங்கை வந்தடைந்த அமெரிக்க அமைதிப்படை பயிற்சி தன்னார்வலர்கள்!
Local
18 September 2026
செப்டம்பர் மாத இறுதியில் பயனாளி உரிமைத் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: கம்பெனி பதிவகத் துறை எச்சரிக்கை!
Local
18 September 2026
மின்சார வாகனத்தில் இயந்திரப்பிரச்சினை? விபத்துக்கான காரணம் கூறிய ஓட்டுநர்!
Local
18 September 2026
வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை- அடுத்த வந்த அதிரடி நடவடிக்கைகள்
Local
18 September 2026
லண்டன் - யாழ்ப்பாணம் நேரடி வானூர்தி சேவை: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கையெழுத்து மனு ஆரம்பம்!
Local
18 September 2026
கல்வித்துறை மறுசீரமைப்பு: 50-க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்கும் 1,600-க்கும் மேற்பட்ட பாடசாலைகள்!
Local
18 September 2026
சாதாரண கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு குறித்து தாய்லாந்தில் பேச்சுவார்த்தை!
Local
18 September 2026
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க ஈரானிய அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசா அனுமதி!
Local
18 September 2026
இங்கிலாந்து எதிர் இலங்கை: 2 ஆவது இருபதுக்கு 20 போட்டி: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!
Local
18 September 2026