General17 September 2026

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவுக்கு விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (17) உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, அந்த ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுவதற்காக சட்டவிரோதமான முறையில் 56 வழித்தட அனுமதிப்பத்திரங்களை வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.




Related recommendation
Hiru TV News | Programmes