General18 September 2026

நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீச்சிக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று (18) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி,மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes