சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய காட்டுப் பூனை இனமொன்றை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leopardus tilcayo என அறிவியல் ரீதியாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய இனம், ‘Tilcayo tiger cat’ என அழைக்கப்படுகிறது.
மெலிந்த உடல் அமைப்பு, புள்ளிகள் மற்றும் வட்டமான காதுகளைக் கொண்ட இந்தப் பூனை, பொதுவாக வளர்க்கப்படும் வீட்டுப் பூனையைவிட சிறியதாகக் காணப்படுகிறது.
ஆண்டிஸ் மலைத்தொடரும் அமேசன் படுகையும் சந்திக்கும் பொலிவியாவின் யுங்காஸ் (Yungas) மேகக் காடுகளில் இந்தப் பூனை வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புதிய இனம் தொடர்பான ஆய்வு Current Biology என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய மற்றும் ஒப்பீட்டளவில் பெரிய பாலூட்டி இனம் ஒன்று கண்டுபிடிக்கப்படுவது மிகவும் அரிதானது என ஆய்வின் இணை ஆசிரியரும், பொலிவியன் காட்டுப் பூனை பாதுகாப்புத் திட்டத்தின் தலைவருமான பாவோலா நோகலெஸ்-அஸ்கார்ருன்ஸ் தெரிவித்துள்ளார்.
லா பாஸ் நகருக்கு அருகிலுள்ள வனவிலங்கு மீட்பு நிலையத்தில் காணப்பட்ட சிறிய காட்டுப் பூனை குறித்து மேற்கொள்ளப்பட்ட மரபணு ஆய்வில், அது இதுவரை அறிவியலால் அடையாளம் காணப்படாத புதிய இனத்தைச் சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Leopardus tilcayo எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இனம், ஏனைய ‘Tiger cat’ இனங்களிலிருந்து சுமார் 14 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தனித்துப் பரிணமித்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புதிய இனத்தின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு நிலை தற்போது தெளிவாகத் தெரியாத நிலையில், அது தொடர்பில் மேலதிக ஆய்வுகள் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொலிவியாவின் உள்ளூர் சமூகங்கள் இந்தப் பூனையை பல தலைமுறைகளாக ‘Tilcayo’ என அழைத்து வந்ததாகவும், அந்தப் பாரம்பரியப் பெயரே புதிய இனத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயம் மற்றும் மனிதக் குடியிருப்புகள் விரிவடைந்து வருவதால், இந்தக் காட்டுப் பூனைகளின் வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Latest News
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு-குற்றவாளிகளுக்கு தனித்தனியே வழங்கப்பட்ட தண்டனை விபரங்கள்!
Local
23 September 2026
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்- குற்றவாளிகள் 15 பேருக்கு 220 வருட கடூழிய சிறைத்தண்டனை
Local
23 September 2026
மேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககேவுக்கு பிணை
Local
22 September 2026
மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கல்வி – நாடளாவிய ரீதியில் 4,570 ஸ்மார்ட் பலகைகள்!
Local
22 September 2026
3x3x3 ரூபிக்ஸ் கியூப்: 6 வயது சிறுமி 3 நாட்களில் இருமுறை உலக சாதனை!
Local
22 September 2026
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனநாயகத்திற்கு விரோதமானது! - நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச சாடல்
Local
22 September 2026
தேசிய அடையாள அட்டைகளுக்காக 50 இலட்சம் அட்டைகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி
Local
22 September 2026
ChatGPT, Claude, Grok-க்கு போட்டியாக Meta-வின் புதிய AI Agent 'MUSE'
Local
22 September 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்ப்பு! - 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு 9 பேர் விடுவிக்கப்பட்டனர்
Local
22 September 2026
ஆழிப்பேரலையில் காணாமல் போன மனைவியை 15 ஆண்டுகளாக கடலில் தேடும் கணவர்!
Local
22 September 2026