சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, கல்முனை நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜன் சிவராசாவின் (Anojan Sivarasa) வீட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பதாக ரிஷாத் பதியுதீன் உறுதியளித்துள்ளார்.
இந்த மரண தண்டனை பற்றிய தகவல்கள் இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகத்தினரிடமும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது
இந்தநிலையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சவூதி அரேபிய மன்னரிடம் அனோஜனின் நிலை குறித்து அவசர கோரிக்கை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த காலத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று மரண தண்டனைக்குள்ளான ரிசானா நபீக்கிற்கு நேர்ந்த கதி, அனோஜனுக்கும் ஏற்படக் கூடாது என்று ஐக்கி்ய சமாதான கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சவூதியின் கடுமையான சட்டங்களை விட, மன்னிப்பும் கருணையுமே இஸ்லாத்தின் உண்மையான சாராம்சமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சவூதி அரசு இஸ்லாத்தின் மன்னிக்கும் பண்பின் அடிப்படையில் அனோஜனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் இலங்கையரான அனோஜனுக்கு கருணை வழங்குமாறு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தத் தகவல் குறித்து அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்ட அலி சப்ரி, மரண தண்டனை விதிக்கப்பட்டதை இலங்கை வெளியுறவு அமைச்சகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றும், முறையான எழுத்துப்பூர்வ தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
நாட்டின் தொழிலாளர் படை 8 மில்லியனைக் கடந்துள்ளது - நுவரெலியாவில் பெண்களின் பங்களிப்பு அதிகம்!
Local
21 September 2026
"நாட்டைவிட்டே தப்பியோட முயன்றவர்களுக்கு வினையான போலி ஆவணங்கள்": காவல்துறையிடம் சிக்கிய அதிநவீன மோசடி வலையமைப்பு!
Local
21 September 2026
தமிழகம் முழுவதும் கோலாகலமாக நிறைவடைந்த விநாயகர் சதுர்த்தி: பிரமாண்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு!
Local
21 September 2026
உத்தேச 22வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்: சஜித் பிரேமதாச அழைப்பு!
Local
21 September 2026
கரீபியன் கடலில் அமெரிக்க இராணுவத்தின் வான் தாக்குதல்: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் பலி!
Local
21 September 2026
இலங்கை மற்றும் சவூதி இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை!
Local
20 September 2026
வீட்டுக்கே சென்று சுகாதார சேவைகளை வழங்கும் புதிய முறைமை - காத்திருப்புப் பட்டியலைக் குறைக்க நடவடிக்கை! - ஜனாதிபதி
Local
20 September 2026
பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்க மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம்!
Local
20 September 2026
அதிகூடிய மழைவீழ்ச்சி நாவலப்பிட்டியில் பதிவு!
Local
20 September 2026
இந்த வருடத்தில் 121,000 பேருக்கு அரச தொழில் வாய்ப்பு : ஜனாதிபதி அறிவிப்பு
Local
20 September 2026