சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சிவராச அனோஜனின் உறவினர்கள், இது தொடர்பான விளக்கங்களை வழங்குவதற்காக இன்று (21) நாட்டில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்திற்குச் செல்லவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞனின் விடுதலையை உறுதி செய்வதில் அரசாங்கம் உட்பட பல தரப்பினரின் கவனமும் தற்போது திரும்பியுள்ளது.
அனோஜன் நேற்று (20) தனது உறவினர்களுக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதுடன், தன்னை விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், அனோஜனின் விடுதலையைக் கோரி கல்முனைப் பகுதியில் பொது மக்கள் மனுத் தாக்கல் இயக்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இந்தநிகழ்வில் அவரது தாயாரும் கலந்துகொண்டார்.
மேலும், அனோஜனின் விடுதலையைப் பெற்றுக்கொடுக்க அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி மட்டக்களப்பில் இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு ஒன்றினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அனோஜனை விடுவிக்கக் கோரி ஹட்டன் - மல்லியப்பு சந்தியில் மௌனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக எமது ஹிரு செய்தியாளர் தெரிவித்தார்.
Latest News
இரட்டைத் தலைகளுடன் பொறித்த அரிய ஆமைக்குஞ்சு - அனைவரையும் வியக்க வைக்கும் சம்பவம்!
Local
21 September 2026
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இன்றைய விலை நிலவரம் இதோ!
Local
21 September 2026
அமெரிக்காவுக்கு பயணமாகிறார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்!
Local
21 September 2026
தலவாக்கலை – லெந்தோம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழப்பு
Local
21 September 2026
கிங் கங்கை மற்றும் குடா கங்கைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு!
Local
21 September 2026
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராச அனோஜன் விவகாரம்: சவூதி அரேபிய தூதரகத்திற்குச் செல்லவுள்ள உறவினர்கள்
Local
21 September 2026
"கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் - முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்" : உதயநிதி ஸ்டாலின் அதிரடிப் பேச்சு!
Local
21 September 2026
முஸ்லிம் காங்கிரஸின் எம்.பியாகிறார் ஹபீப் ரிஃபான் - தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு
Local
21 September 2026
ரூ.46 கோடி காசோலை மோசடி : சகோதரி அம்பிகா மீது முறைப்பாடு அளித்த நடிகை ராதா!
Local
21 September 2026
ஏதிலி அந்தஸ்து கிடைத்தும் பிரித்தானியா செல்ல தடை: ஆபிரிக்க நாட்டில் இலங்கைத் தமிழ் ஏதிலி மரணம்!!
Local
21 September 2026