புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள இருக்கைப்பட்டி சட்டத்தின் கீழ், ஐந்து பேர் கொண்ட குடும்பம் வாகனத்தில் பயணிக்கும்போது, பின்புற இருக்கையின் நடுப்பகுதியில் குழந்தைக்காக மேலதிக இருக்கைப்பட்டியைப் பொருத்திக்கொள்ள முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்த அமைச்சர், வாகனங்களில் தேவையான ஒவ்வொரு இருக்கைக்கும் இருக்கைப்பட்டி பொருத்தப்பட்டிருப்பதே முக்கியம் எனக் குறிப்பிட்டார்.
வாகனத்தில் பயணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை மூன்று அல்லது நான்கு பேர் என மட்டுப்படுத்துவதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், பயணிக்கும் ஒவ்வொருவரும் இருக்கைப்பட்டியை அணிவதை உறுதி செய்வதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இருக்கைப்பட்டிகள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்களில், பயணிகள் அவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.
அதேவேளை, இருக்கைப்பட்டி வசதி இல்லாத வாகனங்களில் அவற்றைப் பொருத்துவதற்காக ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சட்டம் கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் நெடுஞ்சாலையில் பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்து உட்பட 11 வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பேருந்தில் பயணித்த அனைவரும் இருக்கைப்பட்டி அணிந்திருந்ததால், விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் சிறிய காயங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
இருக்கைப்பட்டி சட்டத்தின் நோக்கம் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது அல்ல என்றும், வாகனங்களில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் பிரதான நோக்கம் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.
மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெற்றோர்கள் என ஐந்து பேர் கொண்ட குடும்பம் பயணிக்கும்போது, பின்புற இருக்கையின் நடுப்பகுதியில் ஒரு குழந்தைக்காக மேலதிக இருக்கைப்பட்டியைப் பொருத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Latest News
துருக்கியில் பாடசாலைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 11 பேர் காயம், 15 வயது மாணவன் கைது!
Local
22 September 2026
அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி!
Local
22 September 2026
சவூதியில் தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் தீவிர முயற்சி - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு!
Local
22 September 2026
இலங்கையின் கடன் தரப்படுத்தலை 'B-' ஆக உயர்த்தியது ஃபிட்ச் ரேட்டிங்ஸ்!
Local
22 September 2026
சுரேஷ் சலேவை 28ஆம் திகதி வரை மருத்துவமனையில் வைத்திருக்க பரிந்துரை
Local
22 September 2026
ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை: அனோஜனை காப்பாற்ற ஜனாதிபதி விசேட நடவடிக்கை - சபையில் அமைச்சர் அறிவிப்பு
Local
22 September 2026
சர்வதேச அளவில் இலங்கையின் கடவுச்சீட்டு 169ஆவது இடத்தைப் பிடித்துள்ளது
Local
22 September 2026
திடீரென சரிந்த தங்கத்தின் விலை : நகைப் பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!
Local
22 September 2026
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மூவர் கைது – கிரிஉல்லையில் துப்பாக்கிச்சூடு
Local
22 September 2026
கிரிக்கெட் மறுசீரமைப்பு: புதிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடவும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை ஒப்புதல்
Local
22 September 2026