இந்தியாவின் ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் 'புஷ்பா 2' திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்குத் தொடர்பாக, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட 23 பேரையும் எதிர்வரும் ஜூன் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
2024 டிசம்பர் 4 அன்று ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுனைப் பார்ப்பதற்காகக் கூடிய ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் உயிரிழந்ததுடன், அவரது 8 வயது மகனும் காயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஹைதராபாத் காவல்துறை கடந்த டிசம்பர் 24 அன்று 23 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
குறித்த சம்பவம் தொடர்பாக 2024 டிசம்பர் 13 அன்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின்னர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன், படக்குழுவினர் மற்றும் தெலங்கானா அரசாங்கம் நிதியுதவி வழங்கியிருந்தது.
இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் அல்லு அர்ஜுனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
Latest News
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்துக்கு இணக்கம்!
Local
19 June 2026
சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல்
Local
19 June 2026
டெல்லி அணியின் பயிற்றுவிப்பாளர் குழுவில் யுவராஜ் சிங்? வெளியான முக்கிய தகவல்
Local
19 June 2026
அரசுக்கு 1.4 கோடி நட்டம்: கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
Local
19 June 2026
சட்டசபையில் காரசார விவாதம் - இயக்குநர் அட்லீயை வறுத்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்
Local
19 June 2026
"யுத்தம் தோற்கடிக்கப்பட்டாலும் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்படவில்லை"
Local
19 June 2026
பெண் காவல்துறை கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி: அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!
Local
19 June 2026
நீதிமன்றத் தடைக்கு மத்தியில் செம்மணியில் மாபெரும் போராட்டம்
Local
19 June 2026
ஆசனப் பட்டிகளுக்கான 3 மாத சலுகைக் காலம் இன்றுடன் நிறைவு: சோதனையின் போது சிக்கிய பேருந்து பயணிகள்!
Local
19 June 2026
எல்பிட்டிய பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் தீப்பரவல்
Local
19 June 2026