Entertainment16 July 2026

மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா! - வைரலாகும் பேபிமூன் நிழற்படங்கள்

நடிகை சமந்தா ருத் பிரபு, தன்னுடைய கணவரும் இயக்குநருமான ராஜ் நிடிமோருவுடன் தாய்லாந்து சென்று அங்கு கர்பகாலத்தைக் கொண்டாடி வரும் நிழற்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

சமந்தா நடிப்பில் வெளியான மா இண்டி பங்காரம் திரைப்படம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டி வெற்றி நடைபோடும் நிலையில், கர்பகாலத்தைக் கொண்டாடவும், கர்பகால விடுமுறையை நல்ல முறையில் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வகையில் தாய்லாந்தில் உள்ள சிறப்பு கவனிப்பு விடுதியில் தங்கியிருக்கிறார்.

நலன் சார்ந்த பயணங்களே எப்போதும் எனக்கு மிகவும் பிடித்தமான பயணங்களாக இருந்து வருகின்றன என்று பதிவிட்டு, தாய்லாந்து கர்ப்பகால சிறப்புக் கவனிப்பு விடுதியில் தங்கியிருக்கும் நிழற்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்களை வாழ்த்தி வருகிறார்கள்.

பேபி மூன் எனப்படும் கர்பகால பயணத்தை நல்ல முறையில் திட்டமிட்டு சமந்தா தேர்வு செய்துள்ளார்.

இந்த விடுதியில் தங்கியிருந்து ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, இயற்கையான சூழல் போன்றவற்றுடன் சமந்தா நாட்களைக் கழித்து வருகிறார்.
Related recommendation
Hiru TV News | Programmes